
சத்து நிறைந்த இந்த சாபூதானா- கேரட் மிக்ஸ்ட் ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை ஐட்டத்தை, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒரு பிடி பிடிப்பார்கள். மாலை டிபனுக்கு ஏற்றது.
தேவை:
*சாபூதானா (நல்ல ஜவ்வரிசி) -
-1 கப்
* நல்ல பெரிய கேரட் -1
* தேங்காய் (கீறியது)- அரை கப்
* நல்ல அரிசிமாவு - அரை கப்
* வெல்லப்பொடி - முக்கால் கப்
* ஏலப்பொடி - அரை டீ ஸ்பூன்
* உப்பு - கால் சிட்டிகை
* தண்ணீர் - தேவையானது
செய்முறை:
* முதலில் கேரட்டை அலம்பி, தோல் சீவி மெல்லிசாக வட்ட வடிவில் கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
* ஜவ்வரிசியை அடிக்கனமான வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
* ஆறிய பின், மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக பொடிக்கவும்.
* இத்துடன் வட்ட வடிவில் நறுக்கிய கேரட் மற்றும் கீறி வைத்த தேங்காயைப் போட்டு, தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
* பின்னர் அரைத்த கலவையை வாயகன்ற பாத்திரம் ஒன்றில் போட்டு, அரிசிமாவு, வெல்லப்பொடி, உப்பு, ஏலப்பொடி ஆகியவைகளைச் சேர்த்து, லேசாக தண்ணீரைத் தெளித்து பிசைந்து நன்கு மிக்ஸ் செய்யவும். கையில் வைத்து உருட்டும்படி இருப்பது அவசியம்.
* இதை கொஞ்சம் - கொஞ்சமாக கையில் எடுத்து நீட்ட வடிவில் பிடி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, நெய் தடவிய ப்ளேட் ஒன்றில் தனித்தனியாக வைக்கவும். எல்லாவற்றையும் இவ்வாறு செய்து ரெடியாக வைக்கவும்.
* வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது சூடானதும், கொழுக்கட்டை பிடித்து வைத்திருக்கும் ப்ளேட்டை அதன் மீது வைத்து மேலே மூடிவிடவும்.
*அடுப்பை சிம்மில் வைத்து, 7-8 நிமிடங்கள் சென்ற பிறகு, அடுப்பை அணைத்துவிடவும்.
* மேல் மூடியை மெதுவாக திறக்கையில், கம-கமவென்ற வாசம் மூக்கைத் துளைக்கும்.
* ப்ளேட்டை வெளியே எடுத்து, சிறிது நேரம் ஆறவிடவும்.
* சாபூதானா -கேரட்- மிக்ஸ்ட் ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை இப்போது ரெடி. இதை எடுத்து சாப்பிடுகையில், சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.