
தயிர் சாதம் தயாரிக்கையில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்க்க மணமாகவும், சுவையாகவும் இருக்கும். அஜீரணப் பிரச்னைகளையும் சரிசெய்யும்.
வெந்தயத்தை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து அதை மோருடன் கலக்கவும். உப்பு சேர்த்து ஊறியதும் மிளகாயை காயவைத்து பின் பொரிக்க வாசனையாகவும், காரம் குறைந்தும் காணப்படும்.
இதேபோல் பாகற்காய் சுண்டைக்காய், கோவைக் காயிலும் செய்யலாம்.
சாம்பார் தயாரிக்கும்போது புளிக்கு பதில் நன்கு பழுத்த தக்காளியை அரைத்து சேர்க்க சாம்பார் நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.
இந்த சீசனில் சர்பத், ஜூஸ் தயாரிப்போம். அதற்கு ஐஸ்கட்டி சேர்த்து கலப்போம். வெறும் ஐஸ்கட்டிக்கு பதிலாக புதினாசாறு, எலுமிச்சைசாறு, இஞ்சி சாறு, உப்பு சேர்த்து ஐஸ் க்யூப்ஸாக தயாரித்து, அதை பயன்படுத்த சுவையோடு, ஆரோக்யமும் மேம்படும்.
கொத்தமல்லி விதையை சிறிது நெய்விட்டு வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பொரியல், சாம்பார் செய்து இறக்க போகும்போது சேர்த்து இறக்க மணமாக இருக்கும்.
இட்லி மிளகாய்பொடி அரைக்கும்போது கொப்பரை தேங்காய் துருவல் சேர்க்க சுவையாக இருக்கும்.
எந்த வித பக்கோடா செய்யும்போதும் மாவில் நெய், தயிர் சேர்த்து பிசைந்து அதை கலந்து தண்ணீர் சிறிதே ஊற்றி பிசினாற்போல் கலந்து எண்ணையில் போட்டு எடுக்க கர கரப்பான பக்கோடா சுவையாக இருக்கும்.
எல்லாவித கூட்டுக்கும் தேங்காயை குறைத்துக்கொண்டு பொட்டுக்கடலைமாவு, கடலைமாவு கரைத்த கலவையை ஊற்றி இறக்க திக்காக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.
குருமா செய்கையில் தேங்காயுடன் சோம்பு, ஒரு பட்டை, பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு இரண்டு சேர்த்து அரைத்து அதை சேர்த்து நன்கு கலந்து செய்ய சுவையான திக்கான குருமா சாப்பிட நன்றாக இருக்கும்.
தேங்காய் சேர்க்காமல் பொட்டுக்கடலை, சீரகம், ப மிளகாய் அரைத்து கூட்டு, பொரித்த குழம்பில் சேர்க்க சுவையாக இருக்கும்.
ஊறுகாய் ருசிக்க கடுகு, வெந்தயம் வறுத்து பொடித்த பொடி,காஷ்மீரி மிளகாய்த்தூள், கல் உப்பு பொடித்ததை சேர்த்து நன்கு கலந்து தயாரிக்க பார்க்க பளிச் நிறத்தில் சுவையிலும் சூப்பராக இருக்கும்.
பச்சரிசியில் இடியாப்பம் தயாரிப்பது போலவே சிறுதானிய மாவைக்கொண்டு இடியாப்பம், கொழுக்கட்டை என தயாரிக்க சுவையோடு, சத்தும் சேரும்.
மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் போட்டு வைத்திருந்து பின் கட் பண்ண ஒரே மாதிரியாக வரும்.
பழுக்காத மாம்பழத்தை பிரெளன் கவரில் போட்டு ஒரு பழுத்த பழத்தையும் சேர்த்து மூடிவைக்க விரைவில் பதமாக பழுத்திருக்கும்.
வற்றல் பொரிக்கையில் அரிகரண்டியில் அல்லது பூரி எடுக்கும் கரண்டியை காய்ந்த எண்ணெயில் வைத்து பொரித்து எடுக்க ஒரே மாதிரி பொரிவதுடன் எண்ணையும் குடிக்காது.