சைல்ட் பிஸ்கட்
சைல்ட் பிஸ்கட்pixabay.com

வீட்டிலேயே செய்யலாம் சத்தான "சைல்ட் பிஸ்கட்"!

குழந்தைகளுக்கு நாம் எவ்வளவுதான் ஸ்நாக்ஸ் தந்தாலும் அவர்கள் விரும்புவது என்னமோ பிஸ்கட்டுகள்தான். நாமும் அவர்கள் சாப்பிட்டால் சரி என்று பாக்கெட்டுகளில் இருக்கும் பிஸ்கட்டுகளை வாங்கி தருவோம். அதை விட வீட்டிலேயே சுகாதாரமான முதல் முறையில் சத்தான இந்த பிஸ்கட்டுகளை செய்து தந்தால் குழந்தைகள் போக வர சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கான  இந்த பிஸ்கட்டை சைல்ட் பிஸ்கட் என்றே சொல்லலாம். எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

 
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
வெண்ணைய்- 3 ஸ்பூன்
சர்க்கரை- 2 கப் அல்லது தேவையான அளவு
புட் கலர்- சிறிது
உப்பு - ஒரு சிட்டிகை
ஆப்ப சோடா - சிறிது
பால்  - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவுடன் ஆப்பசோடா சேர்த்து நன்கு சலித்து ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். சர்க்கரையை மிக்ஸியில் இட்டு நைசாக பொடிக்கவும். கோதுமை மாவுடன் பொடித்த சர்க்கரை மற்றும் வெண்ணெய், உப்பு தேவையான கலர் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சிய கெட்டிப்பாலை  சிறிது சிறிதாக தேவையான அளவு தெளித்து ஏறக்குறைய சப்பாத்திமாவு பதத்தில் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து சுத்தமான டேபிளில் வைத்து நாம் விரும்பும் வடிவத்தில்  வெட்டிக் கொள்ளவும். (பாட்டில் மூடி வைத்தும் கட் செய்யலாம்) அடுப்பில் கனமான வாணலியில் நன்றாக காய்ந்த எண்ணெயில் இந்த பிஸ்கட்டுகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான வீட்டிலேயே செய்த பிஸ்கட்டுகள் தயார்.

இதையும் படியுங்கள்:
இந்த 9 விஷயங்கள் உங்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்!
சைல்ட் பிஸ்கட்

குழந்தைகளுக்கு ஏற்றபடி பொம்மைகள் போன்ற மோல்டில் செய்து பொரித்தால் ஹை… பொம்மை பிஸ்கட் என்று விரைவில் காலியாகும்.

குறிப்பு- பொதுவாக பிஸ்கட் என்றால் மைதாவை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கோதுமைமாவு சத்து என்பதால் இங்கு குறிப்பிட்டுள்ளேன். கலர் சேர்த்துக்கொள்வதும் எசன்ஸ் வகைகளை சேர்ப்பதும் அவரவர் சாய்ஸ்.

logo
Kalki Online
kalkionline.com