
கடாய் பனீர்!
தேவையான பொருட்கள்:
பெரிய மிளகாய் (நீள் வாக்கில் நறுக்கியது) _ 2
பெரிய தக்காளி (நறுக்கியது)_ 2
நடுத்தர வெங்காயம் (நறுக்கியது)_ 1
பனீர் க்யூப்ஸாக வெட்டியது _ 1 கப்
இஞ்சி பூண்டு விழுது _1 ஸ்பூன்
கரம் மசாலா _ 1 ஸ்பூன்
மிளகுத்தூள் _ ½ ஸ்பூன்
சீரகத்தூள், கொத்தமல்லி தூள் தலா _1 ஸ்பூன்
மிளகாய்தூள் _1 ஸ்பூன்
கசூரி மேத்தி _ 2 ஸ்பூன்
வெண்ணெய் 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் _ ½ ஸ்பூன் எண்ணெய் _ தேவையான அளவு
உப்பு _ சுவைக்கேற்ப
செய்முறை: அடி கனமான கடாயை எடுத்து அதில் எண்ணெயை சூடாக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும், அது வதங்கியதும், தக்காளி, உப்பு, அனைத்து தூள்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது வெந்ததும் மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும் . இதை சிறிது நேரம் மூடி, சுவைகள் ஒன்றாக கலந்ததும். மிளகுத்தூள் சேர்க்கவும். பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து, பனீர் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் கலக்கவும். சுவையை சரிபார்த்து சரிசெய்யவும்.
கடைசியாக கசூரி மேத்தியை தூவி, மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். மீண்டும் ஒரு நிமிடம் மூடி வைக்கவும். ரொட்டி, நான்ஸ் அல்லது சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.
உலர் காளான் பொரியல்
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் (சுத்தம் செய்து நறுக்கியது) _ 4 கப்
வெங்காயம் (நறுக்கியது)_ 1 கப்
சிறிய தக்காளி _2
இஞ்சி பூண்டு விழுது _ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் _ 1 டீஸ்பூன் கரம்மசாலா _1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் _1 ஸ்பூன்
சீரகத்தூள் _ ½ ஸ்பூன்
கடுகு _ 1 ஸ்பூன்
எலுமிச்சைசாறு 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு _ தேவைக்கு
செய்முறை: ஈரமான காகிதத் துண்டு அல்லது துணியால் காளான்களை துடைத்து சிறிது நேரம் காயவைக்கவும். காய்ந்த பிறகு துண்டுகளாக நறுக்கவும்.
அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அவை கண்ணாடி போல் வரும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மென்மையாகும் வரை தொடர்ந்து கிளறவும்.
கரம் மசாலா, கொத்தமல்லி தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின் நறுக்கிய காளான்களைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடியால் மூடி வைக்கவும். காளான்கள் சமைக்க அதிக நேரம் எடுக்காது. ஒரு நிமிடம் கழித்து கறண்டியின் கைப்பிடிக் கொண்டு நன்றாக கிளறவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும். சாதம், ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.