சத்தான ஈஸி ப்ரேக் பாஸ்ட் புளி உப்புமா & ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் இனிப்பு – உக்களி!

samayal recipes...
samayal recipes...
Published on

கீழே குறிப்பிடப்படும் பொருளைக் கொண்டு மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டால் பத்தே நிமிடத்தில் காலை உணவு தயாராகிவிடும். வேலைக்கு செல்லும் அவசரத்தில் ருசியுடன், சத்தும் சேர்ந்த இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புளி உப்புமா:

பச்சரிசி 4 கப் 

துவரம் பருப்பு 1 கப் 

உப்பு தேவையானது 

மிளகு ஒரு ஸ்பூன் 

சீரகம் அரை ஸ்பூன் 

மிளகாய் ஒன்று

பச்சரிசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக வாணலியில் நிறம் மாறும் வரை வறுத்து ஆறியதும் உப்பு, மிளகு, சீரகம், மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனை ஈரம் படாமல் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால் நான்கு மாதங்கள் ஆனாலும் கெடாது.தேவைப்படும் சமயம் தேவையான அளவு எடுத்து செய்ய பத்து நிமிடத்தில் சத்தான டிபன் செய்துவிடலாம்.

வாணலியில் நல்லெண்ணையில் நான்கு ஸ்பூன் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, 10 முந்திரி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து புளி கரைசல் நீர்க்க கரைத்தது ஒரு கப் மாவுக்கு இரண்டு கப் அளவில் கரைத்து விட்டு தேவையான அளவு பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு ஏற்கனவே சேர்த்துதான் பொடித்து வைத்துள்ளோம். எனவே தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும். நடுக் கொதி வந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை தூவி கலந்து தட்டை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேக விட நொடியில் காலை உணவு தயார்.

உப்பு புளிப்பு காரம் என சுவை மிக்க இந்த உணவுடன் சிறிது சர்க்கரை அல்லது ஊறுகாய் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் இனிப்பு - உக்களி:

 ரவை 1 1/2 கப்

தேங்காய் 1 கப்

வெல்லம் 2 கப்

முந்திரி பருப்பு 10

ஏலக்காய் 4

நெய் 6 ஸ்பூன் 

ஒரு பாத்திரத்தில் ரவை, தேங்காய் துருவல் (2 ஸ்பூன் தேங்காய் துருவலை எடுத்து தனியே வைக்கவும் கடைசியாக வறுத்துப் போட). இரண்டையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக பிசைந்து வைக்கவும். இதனை தட்டை போட்டு மூடி அரை மணி நேரம் ஊற விடவும்.

இதையும் படியுங்கள்:
தயக்கமும் பயமும்தான் நம் முதல் எதிரி!
samayal recipes...

வாணலியில் 4 ஸ்பூன் நெய் விட்டு ஊறிய கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். தட்டைப் போட்டு மூடி அவ்வப்போது திறந்து கிளற ரவை நன்கு வெந்து விடும். வெந்த ரவையில் பொடித்த வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறவும். வாணலியின் அடியில் ஒட்டாமல் இருக்க கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக இரண்டு ஸ்பூன் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன் சேர்த்து வறுத்து போடவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் உக்களி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com