
எனர்ஜி கேரட் கீர்
தேவையான பொருட்கள்;
கேரட் - 2
ஃபுல் க்ரீம் பால் - 1 லிட்டர்.
சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/4 டீ ஸ்பூன்.
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - 1 ஸ்பூன்.
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டு கேரட் துருவலை நன்கு வதக்கவும். அதில் காய்ச்சியபாலை விட்டு மேலும் கொதிக்க விட்டு, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போட்டு கொதி விட்டு இறக்கவும். இதில் பீட்டா கரோட்டின் சத்துடன், பாலின் சக்தியும் நிறைந்த கேரட் கீர் மாணவர்களுக்கு தேர்வு எழுத நல்ல எனர்ஜி தரும்.
உலர்பழ உருண்டை
தேவை:
தோல் உரித்த பாதாம், பிஸ்தா முந்திரி, வால்நட், பொடியாக நறுக்கியது - 1 கப்
காய்ந்த அத்திப்பழம் - 2
பேரீச்சம்பழம், திராட்சை - 1 கப்
நெய் - 1/4 கப்
சர்க்கரைப் பொடி - தேவைக்கு
செய்முறை:
நெய்யில் உலர் பருப்புகளை மெல்லிய தீயில் வறுத்து மிக்ஸியில் போட்டு, பழங்களையும் சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
தேவையான சர்க்கரை பொடி சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். பல சத்துக்களின் உள்ளடக்கிய உலர் பழ உருண்டை ரெடி. இதனை தினமும் குழந்தை களுக்கு கொடுக்கலாம். எனர்ஜி தரும் உருண்டை.
குதிரைவாலி கேரட் அடை
தேவையானது:
குதிரைவாலி அரிசி - 1 கப் துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2கப்
கேரட் துருவல் - 1 கப்
சிவப்பு மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் -ஒரு சிட்டிகை உப்பு , எண்ணெய் -தேவைக்கு
செய்முறை:
அரிசி பருப்புகளை 2 மணிநேரம் ஊறவைத்து களைந்து மிக்ஸியில் சிவப்பு மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் அரைத்த மாவில் கேரட் துருவல் உப்பு கலந்து எண்ணெய் ஊற்றி தோசைக்கல்லில் அடைகளாக சுடவும் குதிரைவாலி அரிசி மற்றும் பருப்புகளின் சத்துடன், கேரட்டின் சத்தும், சேர்ந்து இந்த அடை, மாலை நேரத்துக்கு ஏற்ற தேர்வுக்கான டிபன் ஆகும். மாணவர்களுக்கு சுறுசுறுப்பையும், எனர்ஜியையும் தரும் இந்த சத்தான உணவுகளை செய்து கொடுத்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.