சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! வெரைட்டி சுண்டல் ரெசிபிஸ்!

பட்டர் பீன்ஸ் சுண்டல்
பட்டர் பீன்ஸ் சுண்டல்Image credit - youtube.com

பட்டர் பீன்ஸ் சுண்டல்:

பச்சை பட்டர் பீன்ஸ் ஒரு கப்

உப்பு தேவையானது

பச்சை மிளகாய் 1

தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

கடுகு, கருவேப்பிலை ,தேங்காய் எண்ணெய் தாளிக்க

வறுத்துப் பொடிக்க:

தனியா ஒரு கப் 

கடலைப்பருப்பு 1/2 கப்

உளுத்தம் பருப்பு 1/4 கப் 

மிளகாய் 6

பெருங்காய கட்டி சிறிது

முதலில் வெறும் வாணலியில் தனியா ,மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வறுத்து நைசாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனை எல்லா வகையான சுண்டலுக்கும் கடைசியாக இறக்கும் சமயம் 2 ஸ்பூன் அளவில் சேர்த்துக் கொள்ள ருசியும் மணமும் கூடும்.

பட்டர் பீன்ஸை சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வேகவைத்த பட்டன் பீன்ஸை சேர்த்து கிளறவும். இதில் துருவிய தேங்காயை நான்கு ஸ்பூன் சேர்த்து இறக்கி பொடித்து வைத்துள்ள மசாலா பொடி 2 ஸ்பூன் சேர்த்து கலக்க சுவையான பட்டர் பீன்ஸ் சுண்டல் ரெடி.

பீச் சுண்டல்:

பீச் சுண்டல்
பீச் சுண்டல்Image credit - youtube.com

பட்டாணி ஒரு கப்

இஞ்சி துருவல் ஒரு ஸ்பூன்

மாங்காய் துண்டுகள் 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் 2

உப்பு தேவையானது

தாளிக்க: கடுகு ,கருவேப்பிலை

காய்ந்த பட்டாணியாக இருந்தால் இரவே ஊற வைத்து விடவும். பச்சை பட்டாணியாக இருந்தால் குழையாமல் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
சம்மர் சீசனில் மின் கட்டணத்தைக் குறைக்க இப்படி யோசித்துப் பாருங்க!
பட்டர் பீன்ஸ் சுண்டல்

ஊறிய காய்ந்த பட்டாணியை குக்கரில் உப்பு போட்டு இரண்டு விசில் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து வெந்த பட்டாணியை சேர்த்து தேங்காய் துருவல், இஞ்சி துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். சிறிது ஆறியதும் மாங்காய் துண்டுகள் சேர்த்து கலந்து விடவும்‌ சூட்டுடன் போட்டால் வெந்தது போல் ஆகிவிடும். எனவே ஆறியதும் மாங்காய் துண்டுகளை சேர்க்க வேண்டும். இப்பொழுது சூப்பரான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் ரெடி.

மொச்சை சுண்டல்:

மொச்சை சுண்டல்
மொச்சை சுண்டல்Image credit - youtube.com

மொச்சை கொட்டை ஒரு கப்

உப்பு தேவையானது

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் சிறிது

பொடியாக நறுக்கிய 

கொத்தமல்லி தழை.  சிறிது

தாளிக்க: கடுகு ,கருவேப்பிலை, எண்ணெய்

வறுத்து பொடித்த மசாலா பொடி 2 ஸ்பூன்

மொச்சை கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும் . மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.

வாணலியில் கடுகு, கருவேப்பிலை சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வெந்த மொச்சை கொட்டையை சேர்த்து பெருங்காயத்தூள் ,தேங்காய் துருவல், வறுத்து பொடித்த தனியா மசாலா பொடி, கடைசியாக சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com