சம்மர் சீசனில் மின் கட்டணத்தைக் குறைக்க இப்படி யோசித்துப் பாருங்க!

Electricity bill
Electricity billImg Credit: Airtel

ன்றைய காலகட்டத்தில் வெயில் காலம் வந்துவிட்டால் போதும் நம் வீட்டில் இருக்கும் மின்விசிறிக்கும் மற்றும் ஏசிக்கும் ரெஸ்ட்டே கிடையாது. நம் சின்னக் கலைவாணர் விவேக் கூறுவதுபோல் “இவன் ஸ்டார்ட் பண்ண மாட்டான்; பண்ணிட்டா நிறுத்த மாட்டான்”  என்பதைபோல் சில வீடுகளில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் நம் வீட்டில் உள்ள மின் பெட்டியின் கணக்கும் சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். ஆகையால் இதைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளைப் பார்ப்போம்.  

இயற்கையான காற்றோட்டத்தை மேம்படுத்துதல்:

விடியற்காலை மற்றும் இரவு நேரங்களில் இயல்பான பகல் நேரத்தை ஒப்பிடும்போது குளிர்ந்த காற்று கொஞ்சம் வீசும். அதை நாம் பயன்படுத்திக்கொள்ள முதலில் நம் வீட்டின் ஜன்னல் கதவுகளை அந்த நேரங்களில் திறந்துவிட்டால் ஓரளவுக்கு நம் வீட்டின் வெப்பம் தணியும். இதனால் மின்விசிறி, ஏசி போன்ற மின்சாதனங்கள் பயன்பாட்டைக் கொஞ்சம் குறைக்கலாம். இதன் தாக்கம் நம் மின் கட்டணத்தில்  தெரியத் தொடங்கும்.

அதே நேரம் ஜன்னல்கள் திறந்திருந்தாலும் காலை நேரங்களில் சூரியக்கதிர்கள் உள்ளே நுழையத் தொடங்கும். அதை சமாளிக்க curtainயை ஜன்னலில் போத்தி அதை மறைக்கலாம். அதேபோல் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஜன்னலின் வெளிப்புறத்தில் ஒட்டுவதால் அதுவும் சூரியக்கதிர்களை உள்ளே வராமல் தடுக்கும்.

தேவையில்லாத நேரங்களில் மின்சாதனகளுக்கு ஓய்வு கொடுத்தல்:

நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில மின்சாதனங்கள் பயன்படாத நேரங்களில் அதன் மின்இணைப்பை  துண்டிப்பது  மற்றும் வீட்டில் ஒளிரும் சாதாரண பல்புகளை மாற்றி LED பல்புகளைப் பயன்படுத்துவதால் நம் மின் கட்டணம் குறைய அதிகம் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
Summer Vacation தொடங்கியாச்சு! குழந்தைகள் டைம் பாஸ் செய்ய என்ன செய்யலாம்?
Electricity bill

சமைக்கிற விஷயத்திலும் ஒரு புத்திசாலித்தனம்:

“நெருப்பில்லாமல் புகை இல்லை” அதுபோல நெருப்பில்லாமல் சமைக்கவும் முடியாது. இல்லை நான் மின்னடுப்பு பயன்படுத்துறேன் என்று கூறினாலும் இரண்டிலும் வரப்போவது சூடுகலந்த அனல் காற்றுதான். அது வீடு முழுக்க வீசத் தொடங்கினால் போதும் முற்றிலும் நெருப்பில் இருப்பதுபோல் உணரத் தொடங்கும். ஆகையால் இதை சமாளிக்க வீட்டின் வெளியே கூடாரமோ அல்லது நிழல் நிறைந்த இடத்தில் வைத்து சமைத்தால் வீட்டின் உள்ளே வரும் வெப்பத்தைத் தவிர்க்கலாம். அல்லது அப்படி இடம் என்று இல்லை அது முடியாத காரியம் என்றால் மொத்த சமையல் வேலையையும் காலை மற்றும் மாலை நேரங்களில் முடித்துவிட்டாலே ஓரளவு வெப்பத்தைத் தடுத்து விடலாம். இதுவும் ஒரு வகையில் மின்விசிறி மற்றும் ஏசி வேலையைக் குறைப்பதற்கு உதவும்.

வீட்டின் விரிசல்களைச் சரி படுத்துதல்:

பொதுவாக நம் வீட்டில் வருடம் ஓட ஓட விரிசல்கள் அதிகமாக வர தொடங்கும். மழை, வெயில் என்று அனைத்திலும் சில சேதங்கள் ஏற்படலாம். அதனால் அதை சீக்கிரம் சரி செய்ய தேவையான வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். Damp Proof போன்ற பெயிண்ட் கலவைகளை நம் வீட்டின் கூரையில் மீது பூசுவதன் மூலம் விரிசல்கள் அடைக்கப்பட்டு வெயில் காலங்களில் வெப்பம் உள்ளே வருவதைத் தடுக்க முடியும். இப்படிப்பட்ட சிறிய செலவுகள் நம் மின் கட்டணத்தைப் பெரிய அளவில் குறைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com