டெங்குவை வெல்லும் சத்தான உணவுகள்: விரைவாக நலம் பெற வழிகள்!

health awareness
Nutritious food to beat dengue
Published on

ழை மற்றும் குளிர் காலம் கொசுக்கள் அதிகம் பெருகும் பருவம். இந்தக் காலத்தில் காய்ச்சல் சளி போன்ற உடல்நலப் பாதிப்புகள் அதிகம் பரவுகிறது. இதிலிருந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

காய்ச்சல் பாதிப்புகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு தற்போது பெருகி வருகிறது. டெங்கு என்பது ஒருவித வைரஸால் ஏற்படும் வைரஸ் பாதிப்பாகும், இது பகலில் வரும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இது ஒரு சர்வதேச உடல்நலப் பாதிப்பாக உள்ளது.

டெங்கு  லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் இருந்து கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் வரை பல்வேறு வடிவங்களில் அவரவரின் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வெளிப்படுகிறது. . அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, சொறி மற்றும் இரத்தக்கசிவு ஆகியவைகள்  இதன் அறிகுறிகளாகும்.

பொதுவாகவே காய்ச்சல் வந்தவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் தருவது என்ற சந்தேகம் எழும். அதே சமயம் எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதிலும் கவனம் வைக்க வேண்டும். இங்கே டெங்கு காய்ச்சலின் போது என்ன உணவுகள் தரலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. திக காய்ச்சல் மற்றும் வியர்வையால் ஏற்படும் நீரிழப்பை எதிர்த்துப் போராட, சரியான நீர்த்தன்மையுள்ளவற்றை ஆகாரமாக்கி பராமரிப்பது அவசியம். நிறையத் தண்ணீர்,  ரீஹைட்ரேஷன் கரைசல்கள் (ORS), சத்து மிகுந்த காய்கறி சூப்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற திரவங்களை  குடிக்கலாம்.

2. டெங்கு காய்ச்சலின் போது, ​​பலவீனம் தரும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பலம் தரும்  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த  சமச்சீரான உணவை உண்பது அவசியமாகிறது.. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள்,  புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறை உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

healthy foods
soup varieties...

3.  பொதுவாகவே காய்ச்சலின் போது அதிக பசி உணர்வு தோன்றும்.இதைத் தவிர்க்க ஒரே வேளை அதிக உணவு உண்பதை விட  பகுதி பகுதியாக பிரித்து உண்ணும் போது  உடலின் ஆற்றலைப்  பராமரிக்க உதவுகிறது. மேலும்  அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

4. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், விட்டமின் ஏ நிறைந்த கேரட் உருளை போன்றவைகள்,  மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் துத்தநாகம் நிறைந்த பருப்பு, மிதமான இறைச்சி உணவுகள் தருவதனால் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்.

5.   காய்ச்சல் அதிகம் உள்ளபோது சாதம், கஞ்சி, தயிர் மற்றும் வேகவைத்த காய்கறிகள் போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைத் தருவதே சிறந்தது.. புரோட்டீன் நிறைந்த மீன் முட்டை கோழி போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையில் தரலாம்.

தவிர்க்க வேண்டியவை…

ப்பு மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்: உப்பு மற்றும் காரமான உணவுகள் நீரிழப்பு மற்றும் செரிமானப் பிரச்னைகளை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
கேரட் இருந்தா போதும்! சட்டுன்னு செய்யுங்க நாவில் கரையும் 'கேரட் டிலைட்'!
health awareness

ஆல்கஹால் மற்றும் காஃபின் உணவை கட்டாயம் தவிர்க்கவும். வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அவசியம் தேவை. மன அழுத்தம் தரும் கடுமையான வேலைகளைத் தவிர்க்கவேண்டும். போதுமான தூக்கம் , சத்து மிகுந்த உணவுகளுடன் தகுந்த மருத்துவர் ஆலோசனையும் விரைவில் டெங்குவிலிருந்து நலம்பெற உதவும்.

-சேலம் சுபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com