

கேரட் டிலைட் (Carrot delight) ரெசிபி மிகவும் சாஃப்டாக நல்ல சுவையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துப் போய்விடும். இன்றைக்கு இந்த ரெசிபியை எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று பார்ப்போம்.
கேரட் டிலைட் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட்- 1/2 கிலோ
தண்ணீர்- 500ml
சர்க்கரை- 1/2 கிலோ
சோளமாவு- 3 தேக்கரண்டி
ரெட் புட் கலர்- 1/2 தேக்கரண்டி
Vanilla எசென்ஸ்- 1/2 தேக்கரண்டி
Dessicated coconut- தேவையான அளவு
நட்ஸ்- அலங்கரிக்க தேவையானது
கேரட் டிலைட் செய்முறை விளக்கம்
முதலில் 1/2 கிலோ கேரட்டை நன்றாக கழுவி அதை தோல் சீவி விட்டு குட்டி குட்டியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வெட்டி வைத்திருக்கும் கேரட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொண்டு அதில் 500ml தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இப்போது இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
கேரட் நன்றாக சாப்ட் ஆகும் வரை இதை வேகவைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை எடுத்து கையில் நசுக்கிப் பார்த்தால் நன்றாக மசிந்து வர வேண்டும். இப்போது கேரட்டை முழுமையாக ஆற வைத்து விடவும். இப்போது இதை மிக்ஸிக்கு மாற்றிவிட்டு அதனுடன் 1/2 கப் சர்க்கரை, 3 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ரெட் புட் கலர் 1/2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த பேஸ்டை ஒரு கடாயில் மாற்றிக் கொள்ளவும். இதை அடுப்பில் மீடியம் பிளேமில் வைத்து கைவிடாமல் கிளறிவிடவும். இதில் சோளமாவு பயன்படுத்தியுள்ளதால் சீக்கிரமே கெட்டியாக தொடங்கிவிடும். இது ஒரு அல்வா பதத்திற்கு வரத்தொடங்கும். எசென்ஸ் சேர்க்க விருப்பம் இருந்தால் 1/2 தேக்கரண்டி Vanilla எசென்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடுங்கள். ஆறும்போது இன்னும் கெட்டியாகிவிடும். இப்போது இதை சிறிது சிறிதாக எடுத்து லட்டு போல உருட்டிக்கொள்ளுங்கள். இப்போது ஒரு தட்டில் Dessicated coconut எடுத்துக்கொண்டு உருட்டிய ஸ்வீட்டை அதில் நன்றாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் மிகவும் சுவையான கேரட் டிலைட் ஸ்வீட் தயாராகிவிட்டது.
கண்டிப்பாக நீங்களும் வீட்டில் டிரை பண்ணிப் பாருங்கள். குட்டீல் முதல் பெரியவர்கள் வரை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. சீக்கிரமே செய்யக்கூடிய ஈஸியான ஸ்வீட் ரெசிபி. கடைசியாக இதற்கு மேல் நட்ஸ் வைத்து அலங்கரித்து பரிமாறினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கண்டிப்பாக முயற்சித்துப் பாருங்கள்.