சத்து மிகுந்த சாமை பருப்பு சாதம்!

சாமை பருப்பு சாதம்
சாமை பருப்பு சாதம்www.vidhyashomecooking.com

சிறுதானியம் உடலுக்கு வலிமை சேர்ப்பது. நார்ச்சத்து மிகுந்த உணவு பொருள். சாமை அரிசியில் அரிசி, குருணையில் என்னென்ன  சமையல் பலகாரம் செய்கிறோமோ அத்தனையும் அதில் செய்யலாம். மசாலா பொங்கல், பருப்பு பொங்கல், பருப்பு சாதம், புலாவ் பிரியாணி வெஜிடபிள் சாமை  என்று அத்தனையும் செய்து அசத்தலாம். ருசி ஒன்றும் குறைவுபடாது. ஆதலால் சாமை பருப்பு சாதம் எப்படி செய்வது என்பதை இதில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி- முக்கால் கப்

பயத்தம் பருப்பு- கால் கப் 

துவரம் பருப்பு -

இரண்டு- கைப்பிடி

சாம்பார் பொடி -இரண்டு டேபிள்

 ஸ்பூன்

பச்சை பட்டாணி, கேரட் ,பீன்ஸ், முருங்கைக்காய், தனியா, கருவேப்பிலை, எல்லாவற்றையும் பொடியாக அரிந்தது- ஒன்னரை கப்

எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்

தாளிக்க -மல்லி விதை, கடுகு, வெந்தயம் சிறிதளவு 

புளிக் கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் அரிந்தது- அரை கப்

தக்காளி- இரண்டு பெரிய பழம் அரிந்தது

நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயாளிகளை ஏன் மூட்டு வலி அதிகமாக தாக்குகிறது தெரியுமா?
சாமை பருப்பு சாதம்

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி விதை, கடுகு, வெந்தயம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம் வதக்கவும். கூடவே தக்காளி சேர்த்து  வதக்கி நன்றாக வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். பிறகு புளி கரைசலை ஊற்றவும். அதில் கழுவி வைத்துள்ள அரிசி பருப்புகளை போட்டு, காய்கறி களையும் போட்டு, நான்கு கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி வேகவிடவும். நாலு விசில் வந்தவுடன் குக்கரை அணைக்கவும். பிறகு குக்கரை திறக்கும் போது நெய்யை ஊற்றி நன்றாக கலந்து விட்டு பரிமாறவும். தொட்டுக்கொள்ள வத்தல் வடாம் போதும். 

எப்பொழுதுமே சிறுதானியத்திற்கு கொஞ்சம் அதிகமாக தண்ணீர் வைக்க வேண்டும். இதை மிகவும் கெட்டியாக இல்லாமல் சற்று நீர்க்க சமைத்தால் பரிமாறும் போது கெட்டியாகி விடும்.

கோடைக் காலத்தில் ஒருவிதமான சோர்வு தன்மை நீரிழிவுக் காரர்களுக்கு வரும். அது போன்ற நேரங்களில் இது போல் சமைத்து சாப்பிட்டால் காய்கறி, பருப்பு எல்லாமாக சேர்ந்து உடலுக்கு தேவையான சத்தை அளித்து சக்தியை கொடுக்கும். ஆபரேஷன் செய்து இருப்பவர்களுக்கும் இதுபோல் சமைத்துக் கொடுத்தால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com