நீரிழிவு நோயாளிகளை ஏன் மூட்டு வலி அதிகமாக தாக்குகிறது தெரியுமா?

Do you know why diabetics suffer from joint pain more often?
Do you know why diabetics suffer from joint pain more often?https://www.prevention.com
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுடைய தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள் போன்றவற்றை சர்க்கரை நோய் பெரிதும் பாதிக்கிறது. இதனால் விரல்கள், கைகள், மணிக்கட்டுகள், தோள்கள், கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் பாதங்கள் பாதிக்கக்கூடும். நீண்ட நாள் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் வலிமை குறைந்து எலும்பு முறிவு அபாயத்தை தோற்றுவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்னைகள்:

உறைந்த தோள்பட்டைகள்: நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவு இருந்தால் சர்க்கரை மூலக்கூறுகள் கொலாஜனுடன் இணைந்து விடும். கொலாஜன் என்பது மூட்டுகளை ஒன்றாக வைத்திருக்கும் இணைப்பு திசுக்களை உருவாக்கும் ஒரு முக்கிய புரதம் ஆகும். சர்க்கரை கொலாஜனுடன் இணைந்தால் அது அங்கே ஒட்டிக்கொண்டு அதன் இயக்கத்தை தடை செய்கிறது. அதனால் தோள்பட்டை விறைக்கத் தொடங்குகிறது. அங்கே கடுமையான வலி ஏற்பட்டு சில சமயம் தோள்பட்டையை அசைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

கார்பல் டன்னல் சிண்ட்ரோம் - மணிக்கட்டு குகை நோய்: மணிக்கட்டு குகை நோய் என்பது கையில் உள்ள இரண்டு பிரதான நரம்புகளில் ஒன்றான மீடியன் நரம்பு மணிக்கட்டில் அழுத்தப்படுவதால் மணிக்கட்டு, முன் கை போன்ற இடங்களில் வலி ஏற்படும். கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிவற்றில் கூச்ச உணர்வு ஏற்படும். மேலும். இந்த விரல்கள் பலவீனமடையும்.

நரம்பியல் மூட்டு வலி: நீரிழிவு நோயாளிகளின் கால்கள் மற்றும் கணுக்கால்களில் இந்த வலி தோன்றுகிறது. மூட்டுகள் சேதம் அடையும் போது அதில் உள்ள குஷன் போன்ற அமைப்பு செயல்படாது. இதன் விளைவாக எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

கீல்வாதம்: மூட்டுகளில் ஏற்படும் அழற்சி தேய்மானம், வலி, விறைப்புக்கு வழிவகுக்கும். வீக்கம் மிகவும் கடுமையான மூட்டுவலிக்கு ஆளாக்கும்.

முடக்கு வாதம்: இது நீரிழிவு நோய் போன்ற ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில், வகை 1 நீரிழிவு நோயாளிகளுக்கு முடக்கு வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு நோயாளிகளின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதம்:

கால்சியம் நிறைந்த உணவு: தினசரி உணவில் கால்சியம் நிறைந்த பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் அல்லாத கால்சியம் சத்துக்கள் வேண்டும் என விரும்பினால், சோயா பால், பாதாம் பால் போன்ற வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால் மாற்றுகளை தேர்வு செய்யலாம். கால்சியம் நிறைந்த உணவுகளில் கீரை, காலே மற்றும் புரோக்கோலி போன்ற இலை. பச்சை காய்கறிகள், அத்துடன் டோஃபு, பாதாம் மற்றும் எள் ஆகியவை அடங்கும்.

வைட்டமின் டி ஆதாரங்கள்(Vitamin D): வலுவான எலும்புகளுக்கு, வைட்டமின் டி (Vitamin D) இன்றியமையாதது. சூரிய ஒளி வைட்டமின் டி (Vitamin D) இன் இயற்கையான ஆதாரமாக இருந்தாலும், போதுமான வெளிப்பாட்டைப் பெறுவது சவாலாக இருக்கலாம். சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடுதலாக, முட்டையின் மஞ்சள் கருக்கள், செறிவூட்டப்பட்ட தானியங்கள் வைட்டமின் டி உட்கொள்ளலுக்கு பங்களிக்கும்.

இதையும் படியுங்கள்:
கைவிரல் நகத்தை வைத்து ஒருவரின் குணநலனை கண்டறிவது எப்படி தெரியுமா?
Do you know why diabetics suffer from joint pain more often?

உடற்பயிற்சி: எலும்புகளை வலுப்படுத்த நடைப்பயிற்சி, ஜாகிங், நடனம் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற செயல்பாடுகள் அடங்கும். இந்த நடவடிக்கைகள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல்: உயர் இரத்த சர்க்கரை எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். சீரான உணவைப் பின்பற்றவும். கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கண்காணிக்கவும். உங்கள் சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளவும். சர்க்கரை நோயை திறம்பட நிர்வகிக்க, வழக்கமான இரத்த சர்க்கரை கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் முக்கியம்.

logo
Kalki Online
kalkionline.com