
தேவையான பொருட்கள்:
முள்ளு முருங்கை இலை - 1 கப்
இட்லி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து பின் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசியை கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து பின் முள்ளு முருங்கை இலையை அதில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். மாவில் அதில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, சீரகம் சேர்த்து கலக்கி உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் அடை தோசை போல் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்தால் சத்து நிறைந்த சுவையான முள்ளு முருங்கை அடை ரெடி. சளி, இருமல் குணமாகும்.
முருங்கைக்காய் வடை
தேவையான பொருட்கள்:
முருங்கைக் காய் -2
பொட்டுக்கடலை மாவு -ஒரு கப்
அரிசி மாவு -கால் கப்
பச்சை மிளகாய் - ரெண்டு பொடியாக நறுக்கிய -இஞ்சி ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1 .
சிவப்பு மிளகாய் தூள் - அரை
டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயத்தூள் -சிறிது
உப்பு -தேவைக்கு
கறிவேப்பிலை -சிறிது
பொரிக்க - எண்ணெய் தேவைக்கு
செய்முறை:
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த முருங்கைக்காயின் உள்ளிருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். அதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்தெடுத்த முருங்கைக்காய் விழுது, பொட்டுக் கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு வானலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து வடை மாவை சிறுசிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும் மிகவும் சுவையான மொறுமொறு முருங்கக்காய் வடை ரெடி. வித்தியாசமான முருங்கைக் காய்வடையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.