
கம்பு, பச்சைப் பயறு உருண்டை
செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு, பச்சைப் பயிறு தலா -ஒரு கப்
வெல்லம்- ஒன்றரை கப்
பாதாம், முந்திரி ஃப்ளேக்ஸ் -ஒரு டேபிள் ஸ்பூன்
சிறிதளவு -ஏலத்தூள்
நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கம்பு, பச்சைப்பயிறு இரண்டையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து வைக்கவும். பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டி, கம்பி பாகு பக்குவத்தில் இளம்பாக வந்தவுடன் அதில் ஏலத்தூள் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து கிளறி நெய்விட்டு, பாதாம் முந்திரி ஃப்ளேக்ஸை நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். கம கம வாசனை உடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். எளிமையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும் இந்த லட்டு.
கம்பு பழ சப்பாத்தி:
செய்யத் தேவையான பொருட்கள்:
கம்பு மாவு ,கோதுமை மாவு, சோள மாவு தலா -அரை கப்
முந்திரி -8 பொடித்தது
வாழைப்பழம் நன்றாக பழுத்தது- ஒன்று
நெய்- ரெண்டு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
மாவு வகைகளுடன், உப்பு, சர்க்கரை, முந்திரி, நெய் மசித்த பழம் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து உடனே மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசை கல்லில் இட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும். பழம் சேர்த்திருப்பதால் உடனே சுட்டு எடுப்பது நல்லது. இல்லையென்றால் கறுக்க ஆரம்பித்துவிடும்.
இனிப்பு சுவை இருப்பதால் அப்படியே சாப்பிடலாம். தொட்டுக் கொள்வதற்கு சைடு ஒன்றும் தேவையில்லை. விரும்பினால் வெண்ணெய், ஜாம் வைத்து சாப்பிடலாம். நல்ல ஹெவியாக இருக்கும் நீண்ட நேரம் பசி தாங்கும்.