ஊட்டச்சத்து மிகுந்த ராஜ்மா சாவல் (rajma chawal)!

rajma chawal
rajma chawal

ராஜ்மா சாவல் வட இந்தியாவில் மிகவும் பிரபலாமான உணவாகும். பாசுமதி அரிசி சாதம் மற்றும் ராஜ்மா பருப்பு மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு ஊட்டச்சத்து மிகுந்தது. ராஜ்மா என்கிற கிட்னி பீன்ஸில் கால்சியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், வைட்டமின் B1, நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது.  உடல் வலுப்பெற ராஜ்மாவை பல வகைகளில் சமைத்து உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த ராஜ்மா சாவல் செய்முறையைப் பார்க்கலாம்.

தேவை:

நெய் – 4 மேஜைக் கரண்டி, பாசுமதி அரிசி – 1 கப்   ராஜ்மா- 1 கப் ,வெங்காயம் 1, இஞ்சி பூண்டு விழுது -1 டீ ஸ்பூன், தக்காளி- 2, பச்சை மிளகாய் -2, சீரகம்-   2 ஸ்பூன், மிளகாய் தூள், மல்லித் தூள்,மஞ்சள் தூள் –தலா 1 ஸ்பூன்,கரம் மசாலா துள்- 1 டீ ஸ்பூன், லவங்கம், ஏலக்காய் - தலா 2 பட்டை- சிறிது, பிரியாணி இலை -2 கசூரி மேத்தி, கொத்தமல்லி- சிறிது, உப்பு- தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசுமதி அரிசியை பதமாக உதிரியான சாதமாக வடிக்கவும்.. ராஜ்மாவை 7 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சீரகம், பட்டை,லவங்கம்,ஏலக்காய், ஒரு பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும், பிறகு அதில் சாதத்தை கலந்து உப்புடன்  நன்கு சாதம் உடையாமல் கிளறி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மறந்தும் இந்த மூன்றுப் பொருட்களை முகத்தில் பயன்படுத்த வேண்டாம்!
rajma chawal

மற்றொரு கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சீரகம், பிரியாணி இலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது போடவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்கு சுருள வதக்கவும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போன பின் வெந்த ராஜ்மாவைக் கலந்து தேவையானால் இன்னும் சிறிது உப்பு போட்டு கிரேவியை 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும், கசூரி மேத்தியைப் கையினால் பொடித்துக் கலந்து கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்

சிறிது  நெய்யை சாதத்தின் மீது பரவலாக ஊற்றி ராஜ்மா கிரேவியுடன் சாப்பிட இந்த காம்போ மிகுந்த சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com