ஆலிவ் எண்ணெய்: அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்!

Health benefits of olive oil
Olive oil...
Published on

லிவ் எண்ணெயின் ஒரு குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் அதிக உள்ளடக்கம், குறிப்பாக ஒலிக் அமிலம், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் தொடர்புடையது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

நெடுங்காலமாக ஆலிவ் எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்து வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும் அவர்களுக்கு வலியை தாங்கும் சக்தியும் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இப்படி பல்வேறு விதமான நன்மைகள் செய்யும் ஆலிவ் ஆயில் நீங்கள் நினைப்பதைபோல அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர் அன்மை ஆராய்ச்சியாளர்கள்.

ஆலிவ் ஆயிலில் அதிகப்படியான அளவில் இருக்கும் ஒலிக் (Oleic) அமிலம் உடலில் சேரும்போது அது அதிகப்படியான கொழுப்பு செல்களை உருவாக்குகிறது. என்கிறார்கள் ஒக்லாமோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலிக் அமிலம் AK 12 எனும் புரதச்சத்தை அதிகரிக்கிறது.இந்த புரதச்சத்துதான் முக்கியமான ஊட்டச்சத்து இது உடலில் உள்ள தசை வளர்ச்சி மற்றும் பிற செயல்பாடுகளுக்கு அவசியமானது. ஹார்மோன் செயல்பாடுகளுக்கும் முக்கியமானது.இதில் முக்கியமான விஷயம் ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலிக் அமிலம் AK12 புரதச்சத்தை அதிகரித்து அதனை செல்களில் அதிகம் நிரப்புகிறது .

அதேவேளையில் LXR எனும் புரதச்சத்தை இரத்த செல்களில் இருந்து குறைத்து விடுகிறது. இந்த LXR புரதம்தான் கல்லீரல், குடல் மற்றும் பிற உடல் திசுக்களில் உள்ள செல்களின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கொடுக்காப்புளியின் மருத்துவகுணங்கள் மற்றும் வதக்கல்!
Health benefits of olive oil

பொதுவாக ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலிக் அமிலம் நல்லது செய்கிறேன் என்று AK புரதத்தை செல்களில் அதிகம் நிரப்புகிறது. அதன் காரணமாக LXR புரதச்சத்தை இரத்தத்தில் இருந்து குறைத்துவிடுகிறது. இதனால் உடலில் கொழுப்பு செல்களை அதிகரித்து உடல் பருமன் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆலிவ் ஆயிலால் ஆபத்து என்பது அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாலோ ஏற்படுகிறது, ஏனெனில் இது அதிக அடர்த்தி கொண்டது மற்றும் சிலருக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். அதிக கொழுப்பு அல்லது இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பண்புகள் இருந்தாலும், மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும், மேலும் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளும் ஏற்படலாம்.

நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால், ஆலிவ் எண்ணெயை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஆரோக்கியமான உணவில் ஒரு நாளைக்கு 40 கிராம் (4 தேக்கரண்டி) ஆலிவ் எண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்தால், கூடுதல் கன்னி ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும், ஏனெனில் இது அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கொடுக்காப்புளியின் மருத்துவகுணங்கள் மற்றும் வதக்கல்!
Health benefits of olive oil

ஆலிவ் எண்ணெய், அதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் காரணமாக, சருமத்தை ஈரப்பதமாக்கவும், சூரிய ஒளியில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும், சருமத்தைப் பாதுகாக்கவும் வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்துதல், தேனுடன் சேர்த்து முகப் பூச்சாகப் பயன்படுத்துதல், மற்றும் வறண்ட சருமத்தைப்போக்க கிருமிநாசினியாகப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு வழிகளில் ஆபத்து இல்லாமல் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com