
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
ஓமவல்லி தழை – 1 கப்
புதினா – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
திருநீற்றுப் பச்சிலை – 1 கப்
துளசி – சிறிதளவு
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 4 (காரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
நெய் – 1 ஸ்பூன்
முந்திரி – 6
பிரிஞ்சி இலை – 2
ஏலக்காய் – 2
இஞ்சி – 1 துண்டு
பட்டை, சோம்பு, கிராம்பு – தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, புதினா ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் குக்கரை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி முதலில் முந்திரி, பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து சற்று வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயமும் தக்காளியும் நன்கு வதங்கிய பின், சுத்தம் செய்து வைத்துள்ள ஓமவல்லி தழை, திருநீற்றுப்பச்சிலை, துளசி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி சேர்த்து மூன்று விசில் வரும் வரை குக்கரை மூடி வைத்துவிடவும்.
விசில் நின்றவுடன் குக்கரை திறந்து, சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி, 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு:
மழைக்காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு இது. விருப்பமிருந்தால் தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.
கற்பூரவள்ளி தழை ரசம்
தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி தழை – 1 கைப்பிடி
துளசி – அரை கைப்பிடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
தக்காளி அல்லது புளி – சிறிதளவு
(விருப்பத்தேர்வு)
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகம் மற்றும் மிளகை சேர்த்து வதக்கவும். அதனுடன் பூண்டு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி இருந்தால் அதையும் சேர்த்து வதக்கவும்.
பின்னர் கற்பூரவள்ளி தழை மற்றும் துளசி சேர்த்து நன்கு வதக்கவும். இதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
புளி தேர்வு செய்து இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து புளிக்கரைசல் தயாரித்து வைக்கவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதை மற்றும் புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ரசம் போல் கொதிக்கவிடவும்.
பொங்கி வரும்போது பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு:
சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். சூடாக இருக்கும்போது குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.