இஞ்சி பூண்டு பேஸ்டின் இதர பயன்கள்!

இஞ்சி பூண்டு பேஸ்ட்
இஞ்சி பூண்டு பேஸ்ட்

ஞ்சி பூண்டு பேஸ்ட்டை சிறிதளவு மிக்சியில் போட்டு அரைத்தால் அரைபடாது. அதிகமாக அரைத்தால் அதை என்ன செய்வது? எதற்கு பயன்படுத்துவது என்று  தெரியாமல் விழிப்போம். யோசனை வராது. அதற்கு சில ஐடியா இதோ:

கால் கிலோ இஞ்சியுடன், 100 கிராம் பூண்டை உரித்துப் போட்டு, ரெண்டு டீஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகு, சிறிதளவு கசகசா, ஐந்து லவங்கம் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டால், பல்வேறு விதமான சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
பனீர் சாப்பிடும் ஆவலை தூண்டுவது எது தெரியுமா?
இஞ்சி பூண்டு பேஸ்ட்

அவ்வப்பொழுது மிக்ஸியில் அரைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மிகவும் குறைந்த அளவு  பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்தாலும் நைசாக அரைபடாது. மிக்ஸி நன்றாக அரைபடும் அளவுக்கு போட்டு அரைத்து வைத்துக் கொண்டால் மிக்ஸியும் பழுதில்லாமல் நீண்ட நாள் உழைக்கும். நமக்கும் வேலை எளிதில் முடியும். இப்படி அரைத்ததை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்!

இதை எல்லாவிதமான நான் வெஜ் ஐட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

குருமா, கூட்டு ,குழம்பு வகைகளுக்கும் சேர்த்துக் கொள்ளலாம். 

ராஜ்மா,சோலே, சென்னா ,மட்டர் காளான் வகை கிரேவிகளுக்கு இந்த பேஸ்ட் அவசியம் தேவைப்படும் சுவையூட்டி. 

சேனைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை கொஞ்சம் திக்கான  வில்லைகளாக அரிந்து அதில் இந்த பேஸ்டுடன், உப்பு, தேவையான அளவு மிளகாய் பொடி கலந்து தண்ணீரில் வேகவைத்து, நீர் வற்றியதும், தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து எடுத்தால், எண்ணெயும் குறைந்த அளவே போதும் .வறுவலும் டேஸ்டாக இருக்கும். 

கருணைக்கிழங்கு மசியல்
கருணைக்கிழங்கு மசியல்

கருணைக்கிழங்கு மசியல், சேனைக்கிழங்கு மசால் போன்றவற்றை தாளிக்கும் போது வெங்காயத்துடன் சேர்த்து இந்த பேஸ்டை பயன்படுத்தலாம். 

முட்டைக்கோஸ் கூட்டு செய்வதற்கு இந்த பேஸ்ட்டை போட்டு வதக்கினால் முட்டைகோஸ் வாசனை மட்டுப் படும். ருசியும் மேம்படும். 

பிரியாணி, புலாவு, குஸ்கா, தக்காளி சாதத்திற்கு தனி ருசிதான். 

உருளைக்கிழங்கில் காரக்கறி, பொரியல், குருமா, கூட்டு என்று எது செய்தாலும்  இந்த பேஸ்ட் தருமே தனி சுவை. 

பஜ்ஜி, பக்கோடா மாவுகளில் கலந்து பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், சுவையும் அலாதிதான்.  போனஸாக செரிமான சக்தியையும் கூட்டுமே. 

எல்லாவற்றுக்கும் மேலாக கொத்தவரங்காய் புளி கறி செய்யும் போது, இந்த பேஸ்டில் சிறிதளவு சின்ன வெங்காயத்துடன் வதக்கி செய்து பாருங்கள். சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். 

ஆதலால் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்யும்போது சற்று அதிகமாக செய்து வைத்துக் கொள்ளுங்கள் சமயத்திற்கு பயன்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com