பனீர் சாப்பிடும் ஆவலை தூண்டுவது எது தெரியுமா?

Paneer
Paneer

னித உடலால், தானே எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது. அவற்றை உணவின் மூலமே பெற முடியும் என்பதால் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி வருகிறார்கள். அதனாலேயே பால் சார்ந்த உணவை எடுத்துக்கொண்டு வருகிறோம்.

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப்பொருள் பனீர். இந்த பனீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.பனீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். முக்கியமாக இந்த பனீரை வீட்டிலேயே நாம் எளிதில் தயாரிக்கலாம். இதனால் பனீரை, ‘காட்டேஜ் சீஸ்’ என்றும் இதை அழைப்பதுண்டு.

பலர் பனீரை ஒரு போதைப்பொருள் போல விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? அதிலுள்ள, ‘கேசியான்’ எனும் ஒருவித புரதம்தான். இது பால் பொருட்களில் உள்ள ஒருவித புரோட்டீன். இதுதான் சீஸை நாம் ஜீரணிக்கும் போது, ‘காஸ்மோபின்ஸ்’ எனும் போதை உணர்வை தரும் ஹார்மோனை சுரக்க உதவுகிறது என்கிறார்கள்மிசிசிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். சிலர் பீட்சா மற்றும் பர்கர் போன்றவற்றுக்கு அடிமையாவதற்குக் காரணம் அதில் சேரும் சீஸ்தான் காரணம் என்கிறார்கள்.

பனீரில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சோடியம், கால்சியம், புரதம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 ஆகியவற்றை உள்ளடக்கிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக சீஸ் அறியப்படுகிறது. பால் பொருட்களில் பனீர் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இது புரதத்தின் வளமான மூலமாகும். பனீரில் உள்ள வைட்டமின் பி12 தானே நமது உடலுக்கு கால்சியத்தை வழங்குவதுடன், நாம் சாப்பிடும் பிற உணவுகளில் இருக்கும் கால்சியத்தையும் உறிஞ்சி நமது உடலுக்கு வழங்கும் ஆற்றல் மிக்கது.

அசைவ உணவாளர்களை விட, சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பனீரில் புரோட்டீன் அதிகம். எனவே, சைவ உணவாளர்கள் போதுமான புரோட்டீன் உடலுக்குக் கிடைக்க பனீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, ‘லுமோரிக்’ அமிலம் உள்ளது. இது இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் மிக்கது. இவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை. சீஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அதோடு உடலில் PH அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

பனீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு மற்றும் குறைந்த கிளைசெமிக் உணவு, புரோட்டீன் அதிகம் என்பதால் இது எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். இதனை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியிருக்கும் மற்றும் கண்ட உணவுகளின் மீதான ஆர்வம் குறையும். இருப்பினும் பனீர் கலோரி குறைவானது அல்ல என்பதால், அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக விரும்பினால் பனீரை அடிக்கடி சாப்பிடலாம். இதனால் அதில் உள்ள புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு உதவி புரியும். தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பனீரை உட்கொள்ளும் போது உடற்பயிற்சியால் தசைகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் சரியாகும்.

பனீரில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கிறது. இருப்பினும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பனீரை தங்களின் தினசரி உணவில் சேர்ப்பதாக இருந்தால் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பனீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான சத்துக்களாகும். எனவே, இதனை அடிக்கடி உட்கொள்ளும்போது எலும்பு மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கலாம். எலும்புகளை வலுப்படுத்துவதுடன் சீஸ் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். வெறும் 100 கிராம் பனீரில் 42 சதவீதம் கால்சியம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய பழங்கள்!
Paneer

குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் கால்சியம் பற்றாக்குறையை பனீர் சரி செய்துவிடும் என்பதால் இதை தினமும் உட்கொள்ளும்போது, மற்ற நன்மைகளைத் தவிர்த்து, எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. முதியவர்களின் எலும்பு வலிகளுக்கு கால்சியம் மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அது நாளடைவில் இதய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, அதை உணவின் மூலமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

பால் பிடிக்கவில்லை என்றால் சீஸை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பன்னீர் ஆரோக்கியமான உணவு மற்றும் உண்ண ஆவலைத் தூண்டும் உணவும் கூட. இதை அன்றாட உணவில் சாலட்களில் ஆலீவ் ஆயில், மிளகு சேர்த்து பயன்படுத்தலாம். பனீரை பாஸ்தா செய்யப் பயன்படுத்தலாம், காலிபிளவர் சேர்த்து கட்லட் செய்யலாம். பான்கேக்குளில் பனீர் சேர்த்து சமைக்கலாம், இனிப்பு பர்பியில் பனீர் சேர்த்து சமைக்கலாம். பன்னீர் பிரைட் ரைஸ் செய்யலாம். பனீர் வைத்து எண்ணற்ற வகைகளில் உணவு தயாரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com