ருசியில் Top Notch இந்த பலாக்காய் பொரியல்! 

Palaakai Poriyal Recipe.
Palaakai Poriyal Recipe.

பலாப்பழம் எவ்வளவு சுவையாக இருக்கும் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அதேபோலத்தான் பலாக்காயை பயன்படுத்தி செய்யப்படும் பொரியலும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமாக ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட வேண்டும் என விரும்பினால், இந்த ரெசிபியை ஒருமுறை முயற்சித்து பாருங்கள். 

தேவையான பொருட்கள்

பலாக்காய் - 1½ கப்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - ¼ கப்

சீரகம் - 1 ஸ்பூன் 

மஞ்சள் - ¼ ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - ½ ஸ்பூன் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 

உளுந்து - ½ ஸ்பூன் 

கடுகு - ½ ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்

வெங்காயம் - 1 

செய்முறை

முதலில் பலாக்காயை மேல் தோலை சீவி நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு குக்கரில் சேர்த்து தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வேக விட வேண்டும். குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக விட்டால் போதுமானது. பின்னர் குக்கரைத் திறந்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி பலாக்காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வானலியில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்! 
Palaakai Poriyal Recipe.

கடுகு பொரிந்ததும் வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலக்க வேண்டும். இதில் பச்சை வாடை போனதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா என அனைத்து மசாலா பொருட்களையும் சேருங்கள். 

இவை அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு எடுத்து வைத்துள்ள பலாக்காயை அதில் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை போட்டு கலந்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வேகவிட்டால் சூப்பர் சுவையில் பலாக்காய் பொரியல் தயார். இதை சாதத்துடன் வைத்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். நிச்சயம் இந்த ரெசிபியை ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com