குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்! 

10 Things Parents Shouldn't Do in Front of Kids.
10 Things Parents Shouldn't Do in Front of Kids.
Published on

குழந்தை பருவம் என்பது மிகவும் முக்கியமான பருவமாகும். அந்த சமயத்தில் குழந்தைகள் எதுபோன்ற விஷயங்களைப் பார்க்கிறார்களோ அதை அப்படியே கிரகித்துக் கொள்வார்கள். குறிப்பாக குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிடும் பெற்றோர்கள் குழந்தைகளின் முன்னிலையில் எதுபோன்ற விஷயங்களை செய்யக்கூடாது என்கிற வரைமுறை உள்ளது. இந்த பதிவில் அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

  1. முதலாவதாக குழந்தைகள் முன்னிலையில் பிறரைப் பற்றி அவதூராக பேசாதீர்கள். அப்படி நீங்கள் பேசும்போது, ஒருவேளை அந்த நபர் உங்கள் வீட்டுக்கு வரும்போது நீங்கள் பேசியதை உங்கள் குழந்தை அவர்களிடம் சொல்லிவிட வாய்ப்புள்ளது. 

  2. குழந்தைகளை சமாதானம் செய்ய காசு கொடுத்து பழக்காதிர்கள். அதிலும் கடைக்கு அனுப்பும்போது கமிஷன் கொடுப்பது தவறான செயலாகும். ஒருமுறை, இருமுறை என நீங்கள் தொடங்கி வைக்கும் பழக்கம், காலப்போக்கில் அவசர நேரங்களில் கடைக்கு சென்றாலும் கூட உங்களிடம் கமிஷன் எதிர்பார்க்கும் மனநிலைக்கு குழந்தைகள் மாறிவிடுவார்கள். 

  3. உங்கள் குழந்தையை பிறர் குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து பேசாதீர்கள். அது உங்கள் குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். 

  4. குழந்தைகள் உங்கள் அருகில் இருக்கும் போது சிகரெட், மது, புகையிலை போன்ற கெட்ட விஷயங்களை பெற்றோர்கள் செய்யக்கூடாது. அது அப்படியே அவர்களது மனதில் பதிந்து, நம் அப்பாவே இப்படி செய்கிறார் நாம் செய்தால் என்ன என்கிற எண்ணத்தைத் தூண்டிவிடும். 

  5. உங்கள் குழந்தையை படிப்பு சார்ந்த விஷயங்களில் கண்டிக்கும் போது, எப்போதுமே தாழ்த்தி மட்டுமே பேசாமல், அவர்களுக்கு உந்துதல் ஏற்படுமாறு பாசிட்டிவாக பேசுங்கள். சரியாக படிக்காத குழந்தையை தவறாக பேசுவது அவர்களது மனதை வேதனையடையச் செய்யலாம். 

  6. குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் நல்ல பழக்கங்களை கடைப்பிடியுங்கள். அதேபோல சரியான திரைப்படங்களையும் தேர்வு செய்து பார்க்க வேண்டும். 

  7. குழந்தைகள் காது பட பெற்றோர்கள் தீய வார்த்தைகள் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில் நீங்கள் என்ன பேசுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை அப்படியே கவனித்து, பிறரிடம் அதை பேச வாய்ப்புள்ளது. 

  8. சிறு குழந்தைகளை தவறாக பேசி மிரட்ட வேண்டாம். உதாரணத்திற்கு கையை உடைப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என்பது போன்ற கடினமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். 

  9. கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டைகள் குழந்தைகளுக்கு ஒருபோதும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் முன்னிலையில் சண்டையிடுவதை ஒவ்வொரு பெற்றோரும் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளை மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. 

  10. உங்கள் கணவனிடமோ அல்லது மனைவியிடமோ மறைக்க வேண்டிய விஷயங்களை குழந்தையிடம் சொல்லி, “இதை அவரிடம் சொல்லி விடாதே” எனக் கூறுவது வேண்டாம். குழந்தைகள் அந்த ரகசியத்தை மறைக்க முடியாமல் நீங்கள் மறைக்க விரும்பிய நபரிடமே அந்த உண்மையை சொல்லி பிரச்சனை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அல்லது அந்த குறிப்பிட்ட விஷயத்தை பயன்படுத்தி உங்களை மிரட்டவும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் கடமை!
10 Things Parents Shouldn't Do in Front of Kids.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com