
பொதுவாகவே பனீர் உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே பனீரை நமது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். இதுவரை பனீர் பயன்படுத்தி வித விதமான ரெசிபி பார்த்திருப்பீர்கள். இன்று முற்றிலும் வித்தியாசமாக பஞ்சாபி ஸ்டைலில் பன்னீர் புர்ஜி செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பனீர் - 200 கிராம்
சீரகம் - ½ ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
தக்காளி - 2
வெந்தயம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பனீரை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள் அல்லது கையை வைத்து பொடியாக நசுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் வெண்ணை சேர்த்து சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து அவை வதங்கியதும் நறுக்கிய தக்காளிகளை சேர்க்க வேண்டும். பிறகு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து மூடி போட்டு தக்காளி மென்மையாக வேகும் வரை வதங்கவிட வேண்டும். தக்காளி வெந்ததும் கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவற்றில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அது கொதித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். இறுதியில் இந்த மசாலா திக்கான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான பனீர் புர்ஜி ரெசிபி தயார்.
இந்த செய்முறையை அப்படியே பின்பற்றினால் பனீர் புர்ஜியின் சுவை நன்றாக இருக்கும். அனைவராலும் விரும்பி உண்ணப்படும் இந்த உணவு சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.