பனீர் பராத்தா

பனீர் பராத்தா
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மகாலட்சுமி சுப்பிரமணியன். காரைக்கால்

தேவையானவை :

பனீர்–துருவியது-1கப்,

அம்சூர் பவுடர்-1டீஸ்பூன்,

ப மிளகாய்–4 (நறுக்கியது),

இஞ்சித்துருவல்-1டீஸ்பூன்,

நறுக்கிய கொத்தமல்லி-3டேபிள்ஸ்பூன்,

கரம்மசாலா தூள்-1டீஸ்பூன்,

மிளகாய்த்தூள்–1/2 டீஸ்பூன்,

கோதுமை மாவு–2கப்,

சிறுதானியமாவு-3/4 கப்,

உப்பு–தேவைக்கு.

செய்முறை:

கோதுமை மாவுடன்,சிறுதானியமாவு, உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசறி ,தேவையான தண்ணீர் ஊற்றி பிசையவும்.துருவிய பனீர், இஞ்சி துருவல்,அம்சூர் பவுடர்,உப்பு, ப மிளகாய், கரம்மசாலா தூள், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். மாவை சிறு உருண்டைகளா க உருட்டி சப்பாத்தி யாக தேய்க்கவும்.அதில் இலேசாக எண்ணெய் தடவி,பனீர் கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் தேய்த்து ,சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். தக்காளி,வெங்காய ரைய்தாவுடன் பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com