Pasta Fagioli: அட்டகாசமான ஒரு இத்தாலியன் ரெசிபி!

Pasta Fagioli
Pasta Fagioli
Published on

இத்தாலி நாட்டின் பாரம்பரிய சுவையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வர ஆசையா? அப்படியானால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் Pasta Fagioli ரெசிபியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இந்த உணவு சூப், பருப்பு மற்றும் பாஸ்தாவின் அற்புதமான கலவை ஆகும். இது குளிர்காலத்தில் உங்கள் உடலை வெதுவெதுப்பாக வைத்து, நிம்மதியான உணர்வைத் தரும். சரி வாருங்கள், பாஸ்தா ஃபாஜியோலியை எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில்

  • 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது

  • 3 பூண்டு பற்கள், நசுக்கியது

  • 2 கேரட், பொடியாக நறுக்கியது

  • 1 செலரி தண்டு, பொடியாக நறுக்கியது

  • 1/2 டீஸ்பூன் உலர்ந்த ஒரேகானோ (oregano)

  • 1/2 டீஸ்பூன் உலர்ந்த மார்க்கோராம் (marjoram)

  • 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்

  • உப்பு, தேவையான அளவு

  • 1 கப் பீன்ஸ்

  • 1 தக்காளி, நறுக்கியது

  • 6 கப் தண்ணீர்

  • 1 கப் பாஸ்டா

  • 1/2 கப் சீஸ், துருவியது

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கேரட் மற்றும் செலரி ஆகியவற்றை சேர்த்து மெதுவாக வதக்கவும். வதக்கிய காய்கறிகளில் ஒரேகானோ, மார்க்கோராம், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

பின்னர், அதில் பீன்ஸ் தக்காளி ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். பின்னர், அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் பாஸ்தாவை சேர்க்கவும். பாஸ்தா முழுமையாக வேகும் வரை சமைக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
சுவையான பன்னீர் புர்ஜி, ஆலு டிக்கி, மற்றும் தக்காளி பூண்டு பாஸ்தா செய்யலாம் வாங்க!
Pasta Fagioli

இறுதியாக பாஸ்தா வெந்ததும் சூப்பை பரிமாறும்போது, ஒவ்வொரு பவுலிலும் துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்தால் இத்தாலியன் உணவான பாஸ்தா ஃபாஜியோலி தயார். 

இந்த ரெசிபி தயாரிக்க எளிதாக இருக்கும். அதே நேரம் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம் கொண்டது. இதை ஒரு சிறந்த மதிய உணவு அல்லது இரவு உணவாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். 

இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு உதவி இருக்கும் என நம்புகிறேன். 

Bon appétit! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com