Pasta Payasam: ஒரு சுவையான பாயாசம் ரெசிபி! 

Pasta Payasam
Pasta Payasam

அனைவரும் விரும்பும் இனிப்பு வகைகள் என்று வரும்போது பாரம்பரியமாக நாம் சமைக்கும் சில இனிப்பு வகைகள் முதல் இடத்தைப் பிடிக்கும். அத்தகைய இனிப்பு வகைகளில் பாயாசம் மிகவும் பிரபலமானது. தென்னிந்தியாவில் உருவான கிரீமி டெக்சர் கொண்ட பாயாச வகைகள், அதன் தனித்துவமான சுவைக்காக மிகவும் பிரபலமானது. இந்தப் பதிவில் முற்றிலும் வித்தியாசமாக பாஸ்தாவைப் பயன்படுத்தி நாம் பாயாசம் செய்யப் போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

தேவையான பொருட்கள்: 

  • 1 கப் பாஸ்தா

  • 4 கப் பால்

  • 1 கப் கண்டென்ஸ்டு மில்க்

  • 2 ஸ்பூன் நெய்

  • ¼ கப் நட்ஸ்

  • ஸ்பூன் ஏலக்காய் தூள்

  • 1 ஸ்பூன் காய்ந்த திராட்சை

  • சர்க்கரை தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து மிதமான தீயில் பாஸ்தாவை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அதிலேயே பாலை ஊற்றி மெதுவாக கொதிக்க விடுங்கள். குறைந்த வெப்பத்தில் பாஸ்தா வேகும்வரை கொதிக்க விடவும். 

பாஸ்தா வெந்ததும் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு கிளறுங்கள். தனியாக சிறிய கடாய் ஒன்றில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் நட்ஸ் மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாஸ்தா பாயாசத்தில் சேருங்கள். 

இதையும் படியுங்கள்:
Pot Water Benefits: மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 
Pasta Payasam

இறுதியில் பாயசம் அதன் கெட்டியான தன்மையை அடைந்ததும், ஏலக்காய் தூள் தூவி இறக்கினால், சூப்பரான சுவையில் பாஸ்தா பாயாசம் தயார். மீதம் இருக்கும் நட்ஸ் மற்றும் திராட்சைகளை இதன் மேல் தூவி பரிமாறினால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் சாப்பிடுவார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com