மனித நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து தண்ணீரை சேமிப்பதற்கு பல்வேறு விதமான முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய முறைகளில் மண்பானையில் தண்ணீர் சேமித்து குடிப்பது, உலகெங்கிலும் பல கலாச்சாரங்களில் நடைமுறையில் இருந்ததாகும். குறிப்பாக மண்பானையில் தண்ணீர் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
சுவை மற்றும் நறுமணம்: மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரின் சுவை மற்றும் நறுமணம் மேம்படுகிறது. தண்ணீர், பானையின் மண்ணுடன் வினைபுரிந்து சுவை மற்றும் தாதுக்கள் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது. இந்த செயல்முறை தண்ணீரின் இயற்கையான குணங்களை மேம்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாக மாற்றுகிறது.
இயற்கை வடிகட்டி: மண்பானையில் சேமிக்கப்படும் நீர் இயற்கையான வடிகட்டுதல் செயல்முறைக்கு உட்படுகிறது. குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் தண்ணீரில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் வண்டல்களை சிக்க வைக்கும் நுண்ணிய மைக்ரோ துளைகளைக் கொண்டுள்ளன. இந்த வடிகட்டுதல் செயல்முறையில் தண்ணீரில் இருக்கும் சில அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு தூய்மையான குடிநீராக மாறுகிறது.
வெப்பநிலை நிர்வாகம்: மண்பானையில் இருக்கும் தண்ணீரின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக களிமண் பானைகள் சிறந்த இன்சுலேஷன் பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு மண்பானையில் தண்ணீர் சேமிக்கப்படும்போது அது படிப்படியாக வெப்பத்தை உறிஞ்சி, அதிக வெப்பமான கால நிலையிலும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. இதே போல குளிர்ந்த காலநிலையில் தண்ணீர் அதிக குளிர்ச்சியடைவதைத் தடுக்கிறது.
ஆல்கலைன் PH பராமரிப்பு: சில கார களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் நீரில் பிஎச் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. ஆல்கலைன் நீரில் அதிக PH அளவு இருக்கும். இது உடலில் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி சிறந்த செரிமானம் மற்றும் நீரற்றத்தை மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து பாதுகாப்பு: பனைகளில் தண்ணீரை சேமிப்பது தண்ணீரின் அத்தியாவசியத் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க உதவுகிறது. பிளாஸ்டிக் அல்லது உலோகப் பாத்திரங்கள் தண்ணீருடன் வினைபுரிந்து அதன் தன்மைகளை மாற்றுகிறது. ஆனால் பானை, இயற்கை பொருட்களால் செய்யப்பட்டது என்பதால் தண்ணீரின் தன்மையுடன் இது எந்த வகையிலும் தலையிடாது. இதன் விளைவாக தண்ணீர் அதன் கனிமங்களை உள்ளேயே தக்க வைத்து அதன் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.