சூப்பர் சுவையில் பாஸ்தா ரெசிபி!

Pasta recipes in Tamil
Pasta recipes in Tamil

இத்தாலியின் ஒரு முக்கிய உணவான பாஸ்தா தற்போது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களின் இதயங்களிலும், சமையலறைகளிலும் நுழைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்தியர்களின் கமகமக்கும் மசாலாக்களின் மாயாஜாலத்தால், பாஸ்தாவின் சுவை மேலும் அதிகரித்துள்ளது. இன்று மிகவும் எளிய முறையில் நம் வீட்டிலேயே வேகமாக செய்யக்கூடிய பாஸ்தா ரெசிபி பற்றி தெரிந்து கொள்வோம். 

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 2 பாக்கெட்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ½ ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1 

வெங்காயம், கேரட், குடைமிளகாய் - 1

தக்காளி சாஸ் - 1 ஸ்பூன் 

சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 

கரம் மசாலா - ½ ஸ்பூன் 

சீரகப்பொடி - ½ ஸ்பூன் 

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பாஸ்தா, எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு போட்டு நன்கு கலக்கி, வேக வைக்க வேண்டும். பாஸ்தா வெந்ததும் அதில் உள்ள நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். 

அதன் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், குடைமிளகாய் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் ஓரளவுக்கு வெந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
பூரி Tacos செய்யலாம் வாங்க! 
Pasta recipes in Tamil

அடுத்ததாக தக்காளி சாஸ், சில்லி சாஸ், கரம் மசாலா, சீரகப்பொடி, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவையில் பச்சை வாடை போனதும் எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை போட்டு ஐந்து நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையில் பாஸ்தா தயார். 

இதை யார் வேண்டுமானாலும் விரைவாக வீட்டிலேயே செய்யலாம். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com