
சுவை மிகுந்த அல் டென்டே பாஸ்தா சாலட் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உலர் பழ மில்க் ஷேக் எப்படி செய்வதென பார்க்கலாம் வாங்க. (Pasta salad and milkshake)
அல் டென்டே பாஸ்தா சாலட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பாஸ்தா 250 கிராம்
2.நறுக்கிய குடை மிளகாய் 1 கப்
3.நறுக்கிய செரி தக்காளி ½ கப்
4.நறுக்கிய சுக்கினி ½ கப்
5.ஆலிவ் ½ கப்
6.பர்மேசன் அல்லது மொசரெல்லா சீஸ் 1 கப்
7.நறுக்கிய வெங்காயத் தாள் ⅓ கப்
8.ஒரகானோ ½ டீஸ்பூன்
9.மிளகுத் தூள் ½ டீஸ்பூன்
10.வினிகர் ⅓ டீஸ்பூன்
11.ஆலிவ் ஆயில் ⅓ டீஸ்பூன்
12.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
13.உப்பு தேவையான அளவு
செய்முறை:
பாஸ்தாவை அல் டென்டே (குழையாத) பதத்தில் சமைத்து எடுத்து ஆறவிடவும். சீஸை துருவிக்கொள்ளவும். ட்ரெஸ்ஸிங் செய்ய வினிகர், ஆலிவ் ஆயில், மிளகுத்தூள், ஒரகானோ மற்றும் லெமன் ஜூஸை ஒன்றாக கலந்து கொள்ளவும். ஒரு பெரிய பௌலில் பாஸ்தா மற்றும் ஆலிவ் உள்ளிட்ட காய்கறிகளை போட்டு நன்கு மென்மையாக கலந்துவிடவும். அதன் மீது ட்ரெஸ்ஸிங்க்காக கலந்து வைத்ததை ஊற்றவும். தேவையான உப்பையும் போட்டு அனைத்தையும் நன்கு கலக்கவும். அதன் மீது துருவிய சீஸை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். புளிப்பு காரம் இரண்டும் சேர்ந்த சுவையில் அருமையான சாலட் ரெடி.
உலர் பழ மில்க் ஷேக் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.குளிர்ந்த பால் 2 கப்
2.ஊறவைத்து உரித்த ஆல்மண்ட் 5
3.முழு முந்திரி 5
4.விதை நீக்கிய பேரீட்சம் பழம் 4
5.உலர் அத்திப் பழம் 2
6.உலர் திராட்சை 1டேபிள் ஸ்பூன்
7.தேன் அல்லது சர்க்கரை 1டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
8.ஐஸ் க்யூப்ஸ் தேவையான அளவு
செய்முறை:
அத்திப்பழம் மற்றும் பேரீட்சம் பழங்களை சுடு நீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும். மிக்ஸியில் ஊறவைத்த பழங்கள், ஆல்மண்ட், முந்திரி, திராட்சை, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து, அனைத்தும் மசிந்து க்ரீமி டெக்ச்சர் வரும்வரை அரைக்கவும். பின் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி பருகவும். கால்சியம், வைட்டமின்கள், கொழுப்புச்சத்து போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்த சுவையான பானம்!