வீட்ல பொட்டுக்கடலை மட்டும்தான் இருக்கா? அதை வெச்சு ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க!

பொட்டுக்கடலை ஸ்வீட் ...
பொட்டுக்கடலை ஸ்வீட் ...youtube.com

சிறுவயது நியாபகங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரியும், 90ஸ் கிட்ஸ்களின் ஸ்நாக்ஸ் இந்த பொட்டுக்கடலைதான். வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அள்ளி எடுத்துக்கொண்டு சென்று நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட நினைவுகள் இருக்கிறது. பொட்டுக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். சரி வாங்க, அப்படிப்பட்ட பொட்டுக்கடலையை வெச்சு சட்டுன்னு ஒரு ஸ்வீட் செஞ்சிடலாம்.

செய்ய தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை-1கப்.

ஏலக்காய்-2

வெல்லம்- 2

நெய்-2 தேக்கரண்டி.

முந்திரி-10

உப்பு- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 1 கப் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக பொன் நிறமாக வறுத்தெடுத்து கொள்ளவும். அப்படியே அந்த பொட்டுக் கடலையை மிக்ஸியில் சேர்த்து வாசனைக்கு 2 ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் வெல்லம், 2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் நன்றாக கரைந்து வந்த பின்பு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அழகான வளைந்த புருவங்களுக்கு ‘த்ரெட்டிங்’தான் பெஸ்ட்!
பொட்டுக்கடலை ஸ்வீட் ...

இப்போது ஒரு ஃபேனில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சலித்து எடுத்துக்கொண்டு, அத்துடன் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கின்டிவிட்டு பிறகு அடுப்பில் வைத்து ஸ்டவ்வை ஆன் செய்யவும்.

இப்போது கெட்டியாக ஆரமிக்கும் மாவை நன்றாக கலந்துவிட்டு கொண்டேயிருக்கவும். இப்போது அதில் 2 தேக்கரண்டி நெய், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கின்டவும். இப்போது 10 முந்திரியை நெய்யில் வறுத்து அதையும் இத்துடன் சேர்த்து கின்டியிறக்கவும். அவ்வளவு தான் சட்டுன்னு பொட்டுக்கடலை ஸ்வீட் தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்வீட்டில் வெறும் பொட்டுக்கடலையை மட்டுமே பயன் படுத்தியிருப்பதால், ஆரோக்கியமானதாகும். எனவே நீங்களும் ஒருமுறை வீட்டிலே செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com