குளிர் சூழலுக்கு அருமருந்தாகும் மிளகு உருண்டைக் குழம்பு!

மிளகு உருண்டைக் குழம்பு
மிளகு உருண்டைக் குழம்பு www.youtube.com
Published on

-வசந்தா மாரிமுத்து

குளிர் நாட்களில் உடல் நலப் பிரச்னைகள் வந்து வாட்டும். குளிர் சூழலுக்கு இதமாகவும் மருந்தாகவும் ஆரோக்கியமான ரெசிபி.

மிளகு உருண்டைக் குழம்பு 

தேவை:

மிளகு - 11/2 ஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல்- 4

புளி - எலுமிச்சம் பழம் அளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கடுகு – தாளிக்க

செய்முறை:

ளுத்தம் பருப்பை ஊறவைத்து நைசாக அரைக்கவும். அரை டீஸ்பூன் அளவு மிளகை கொரகொரப்பாக அரைத்து பருப்புடன் சேர்த்து அளவாக உப்பு போட்டு கலக்கவும். புளியை கரைத்து உப்பு போட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி போடவும். பின்னர் பொன்னிறமாக வெந்துததும் எடுக்கவும்.

வேறு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், மீதி மிளகு, தனியா, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். ஆறியதும் பொடித்து. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
நெய் மணக்கும் மிளகு இட்லி செய்வது எப்படி?
மிளகு உருண்டைக் குழம்பு

பச்சை வாசனை போனதும் அரைத்த பொடியைக் கலந்து கொதிக்க விடவும். குழம்பு பதம் வந்ததும் கறிவேப்பிலை பொரித்து எடுத்த உருண்டைகளைப் போட்டு கிளறி இறக்கவும். மிளகு உருண்டைக் குழம்பு தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

பேரைச் சொன்னாலே போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நாக்கில் நீர் ஊற வைப்பது அதுதான் கட்லெட்!

அவல் கட்லெட்
அவல் கட்லெட்tamil.abplive.com

அவல் கட்லெட்

தேவை:

அவல் - 1 கப்

உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்தது)

பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

இஞ்சி,பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். பச்சைமிளகாயை நறுக்கவும்.

அவலை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து  எடுத்து மசித்த உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் , வேகவைத்த பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பிசைந்து விரும்பிய வடிவில் கட்லட்டுகளாக செய்யவும்.

இந்த கட்லெட்டுகளை கரைத்த சோளமாவில் தோய்த்து பொடித்த அவலில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். மாலை நேரம் சாப்பிட சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com