நெய் மணக்கும் மிளகு இட்லி செய்வது எப்படி?

நெய் மணக்கும் மிளகு இட்லி
நெய் மணக்கும் மிளகு இட்லி
Published on

நெய் மணக்கும் மிளகு இட்லி:

இட்லி மாவு 4 கப்

மிளகு 2 ஸ்பூன் 

சீரகம் அரை ஸ்பூன் 

நெய் 3 ஸ்பூன் 

கடுகு சிறிது 

கருவேப்பிலை சிறிது

மிளகை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். இட்லி மாவு கொண்டு இட்லிகளை வார்த்தெடுத்து சிறிது ஆறியதும் துண்டுகள் போட்டு தயாராக வைக்கவும்.

வாணலியில் நெய் 2 ஸ்பூன் விட்டு கடுகு, சீரகம், சிறிது கருவேப்பிலை தாளித்து  துண்டுகளாக்கிய இட்லிகளை போட்டு பொடித்த மிளகையும் சேர்த்து கலந்து இறக்கி மேலும் 1ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாற நெய் மணக்கும் மிளகு இட்லி தயார். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. நெய் மணமும், மிளகின் ருசியும் சேர்ந்து சுவை அபாரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டிய 25 தனிமனித நிதிக் குறிப்புகள்!
நெய் மணக்கும் மிளகு இட்லி

மழைக்கு ஏற்ற தொண்டைக்கு இதமான வெஜிடபிள் க்ளியர் சூப்!

பீன்ஸ் 10 

கேரட் 1 

பூண்டு 2 பற்கள்

வெண்ணெய் 1 ஸ்பூன்

உப்பு தேவையானது 

மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்

கொத்தமல்லி சிறிது 

சர்க்கரை அரை ஸ்பூன் 

சோள மாவு 2 ஸ்பூன்

வெஜிடபிள் க்ளியர் சூப்
வெஜிடபிள் க்ளியர் சூப்

பீன்ஸ், கேரட், பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து நான்கு கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு, பொடித்த மிளகு சீரகம் சேர்த்து கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் இரண்டு ஸ்பூன் சோளமாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கியதும் 1/2 ஸ்பூன் வெண்ணெய், 1/2 ஸ்பூன் சர்க்கரை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது தூவி பரிமாற ருசியான வெஜிடபிள் கிளியர் சூப் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com