அச்சச்சோ உஷார்! பெருங்காயத்தில் கலப்படமாம்!

Perungayam
Perungayam
Published on

உணவிற்கு மணமும் மற்றும் செரிமான சக்தியையும் தரக்கூடிய பெருங்காயத்தில் அதிக டிமாண்ட் காரணமாக கலப்படம் செய்யப்படுகிறதாம். கலப்பட பெருங்காயத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரியுமா? பெருங்காயத்தில் சின்தெடிக் சாயங்கள் மற்றும் லெட் க்ரோமேட் ரசாயனம் போன்றவைகள் சேர்ப்பதால் ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதாகத் தெரிகிறது. மேலும் இது ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்துமாம்.

கலப்படம் செய்யப்படும் பொருட்கள்:

மேலும் பல பொருட்கள் கலப்படத்திற்காக பெருங்காயத்தில் சேர்க்கப்படுகிறது.

சாக் பௌடர், சிவப்பு களிமண், ஜிப்சம் மற்றும் ஸ்டார்ச் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. சாக் பௌடர் மற்றும் சிவப்பு களிமண் சுவை மற்றும் பெருங்காயத்தின் தன்மையை கெடுக்கும்.

சுத்தமான பெருங்காயம் நல்ல மணமாகவும் உணவில் சேர்த்தவுடன் கரையக் கூடியதாக இருக்கும். மணமும் குறைவாகவே இருக்கும். உணவின் சுவையையே கெடுக்கக் கூடும்.

கலப்பட பெருங்காயத்தால் gastrointestinal tissues, அலர்ஜி, புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படலாம். சுத்தமான பெருங்காயம் நல்ல மணமாகவும் உணவில் சேர்த்தவுடன் கரையக் கூடியதாக இருக்கும்.

கலப்பட பெருங்காயத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

  • சாதாரணமாக பெருங்காயத்தின் தன்மை மென்மையாக இருக்கும். உங்கள் விரல்களில் நடுவே பெருங்காயப் பௌடரை தேய்த்துக் பாருங்கள். அது கரகரப்பாக இருந்தால் கலப்படமானதாகும். மேலும் சுத்தமான பெருங்காயம் எளிதில் கரையக்கூடியது.

  • சுத்தமான பெருங்காயத்தில் நல்ல நறுமணம் இருக்கும். மணம் குறைந்து இருந்தால் அது கலப்படம். சிறிது எடுத்து சூடான எண்ணையில் போட அதன் மணம் உடனே பரவும். மணமில்லை என்றால் அது கலப்படமானது.

  • சுத்தமான பெருங்காயத்தின் நிறம் மஞ்சளில் இருந்து லேசான ப்ரௌன் நிறத்தில் இருக்கும். ஸ்டார்ச் கலக்கப்பட்டு இருந்தால் அந்த பெருங்காயம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
16 டன்களைக் தாங்கி நகர வேண்டிய கொல்கத்தா ஜெகந்நாதரின் தேருக்கு சுகோய் போர் விமானத்தின் டயர்கள்!
Perungayam

Dissolution test

சிறிது பெருங்காய பௌடரை வெது வெதுப்பான நீரில் சேர்க்கவும். சுத்தமான பெருங்காயமாக இருந்தால் அடியில் தங்காமல் கரையும். கலப்படமான பெருங்காயமாக இருந்தால் அடியில் தங்கும்.

Heat test

சிறிது பெருங்காயத்தை எடுத்து ஒரு இலுப்பாணாவில் சேருங்கள். சுத்தமான பெருங்காயமாக இருந்தால் நல்ல தீவிரமான மணம் வரும். புகை வரும் ஆனால் சாம்பலாகாது. இதுவே கலப்படமாக இருந்தால் மணமே வராது.

மேற்கூறிய முறைகளில் நீங்கள் பரிசோதித்து கலப்பட பெருங்காயத்தை தவிர்த்து சுத்தமான பெருங்காயத்தை வாங்குவது தான் உடலுக்கு ஆரோக்கியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com