பிரண்டை சூப் செய்முறையும் நன்மைகளும்!

பிரண்டை சூப் செய்முறை.
பிரண்டை சூப்...
Published on

பிரண்டை என்றாலே, மருத்துவ குணங்கள் நிறைந்த ஆயுளை நீட்டிக்கும் மூலிகை என்று சொல்லலாம். வயல்களில் படர்ந்து வளரக்கூடிய பிரண்டையின் வேர் மட்டும் தண்டு மருத்துவத்திற்காக பயன்படுத்தப் படுகிறது. ஆண்மை விருத்திக்கு பேருதவி புரிவது இந்த பிரண்டைதான். ஜீரண சக்தியை பெருக்கும். உடலின் பலத்தை கூட்டும். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.

இதில் வைட்டமின் சி, இ, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு, ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளது. இது பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இதை தினமும் ஒரு தடவை சூப் வைத்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

பிரண்டை சூப் செய்ய தேவையான பொருட்கள்;

பிரண்டை - ஒரு கட்டு

தக்காளி - 2 அல்லது 3

பச்சை மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 6

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 4 பல்

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

மல்லித்தழை - சிறிதளவு

வெள்ளை மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

இதையும் படியுங்கள்:
துயரங்களை ஏற்க வேண்டாம். ஒப்புக் கொள்ளலாம்!
பிரண்டை சூப் செய்முறை.

செய்யும் முறை;

பிரண்டையை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிளகுத் தூள் தவிர மற்றவைஅனைத்தையும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு அடுப்பில் மூன்று விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். இதன் பின்னர் அதை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்தால் பிரண்டை சூப் தயார்.

பிரண்டை சூப்பின் நன்மைகள்;

*நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு  பிரண்டை சூப் சிறந்த நிவாரணி.

*மூலத்தில் பிரச்னை இருப்பவர் இதை தினமும் சாப்பிடுவது நன்மை தரும்.

* ரத்தத்தில் அளவுக்கு மீறி இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது.

*உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும் தன்மை பிரண்டைக்கு இருக்கிறது.

*எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி, வீக்கத்தை இது விரைவாகக் குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும் செயல்பாடுகளை பிரண்டை துரிதப்படுத்துகிறது.

* குழந்தைகளுக்கு. இவர்களுக்கு உண்டாகும் வயிற்று உப்புசத்துக்கு, பிரண்டை சூப் கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 *பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகரிக்கும்.  

*தினமும் வேலைக்கு செல்பவர்கள் சந்திக்கக்கூடிய முதுகுவலி, கழுத்து வலி காரணமாக தலையை அசைக்க முடியாமல் இருப்பவர்கள் பிரண்டை சாப்பிட்டால் அது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com