மார்கழி மாத பொங்கல்: சுவையைக்கூட்டும் எளிய முறைகள்!

pongal recipes
Pongal in month of Margazhi
Published on

மார்கழி மாதம் பொங்கல் தயாரிக்க அரிசி பாசிப்பருப்பு இவற்றை வறுத்து குக்கரில் வைத்து தயாரிக்க பொங்கல் சுவையாக இருக்கும்.

அரிசி பருப்பு இவைகளை தனித்தனியாக வேகவைத்து பிறகு சேர்க்க கட்டி தட்டாமல் பொங்கல் குழைவாக இருக்கும்.

அரிசியோடு பால் சேர்க்க பொங்கல் சுவையாக இருக்கும்.

உங்கள் வீட்டில் வெண்கலப்பானை இருந்தால் அதில் பொங்கல் தயாரிக்க சுவை அபாரமாக இருக்கும்.

பாசிப் பருப்புக்கு பதிலாக பச்சைபயறை வறுத்து வேகவைத்து வெண்பொங்கல் செய்ய அபார சுவையாக இருக்கும். முழு பச்சைபயறு சேர்ப்பதால் ஆரோக்கியம் கூடும்.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோதுமை வரையில் பொங்கல் தயாரிக்க உடலுக்கு நல்லது.

கோதுமை ரவை பாசிப்பருப்பு இரண்டையும் தனியாக வறுத்து தனித்தனி பாத்திரத்தில் வேகவைத்து பிறகு சேர்க்க கட்டி இல்லாமல் நன்கு குழைந்து இருக்கும்.

மிளகு சீரகத்தை நன்கு வறுத்து பொடி சேர்த்து வைத்துக் கொண்டால் பொங்கலுக்கு சேர்க்க சுலபமாக இருக்கும்.

சர்க்கரை பொங்கலுக்கு அரிசி பருப்பு இரண்டையும் தனியாக வறுத்து வேகவைத்து பிறகு கலந்து பொங்கல் தயாரிக்கவும். வெல்லத்தை நன்கு கெட்டிபாகபாகு பதம் ஆக்கி அதில் குழைந்த அரிசி பருப்பு சேர்த்து சர்க்கரைப் பொங்கல் தயாரிக்க உங்கள் தயாரிப்பு கோவில் பொங்கல் போன்று இருக்கும்.

வேலை சுலபமாக்க ஏலப்பொடி முந்திரியை கிள்ளி வைப்பது, வெல்லத்தைப் பொடித்து வைத்துக்கொள்வது போன்றவை உங்கள் பொங்கல் தயாரிப்புக்கு பயனாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கலில் குங்குமப்பூ சேர்க்க முதலில் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவையுங்கள்.

நீங்கள் ஒரு கப் தேங்காய், உளுத்தம்பருப்பு கடலைபருப்பு இவற்றை வெறும் வாணலியில் எண்ணை விடாமல் வறுத்து பொடிசெய்து வைக்க எந்த கூட்டு தயாரித்தாலும் இதை சேர்க்க வேலை சுலமபமாகும். இது குறிப்பாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிலர் கறிவேப்பிலையை காயவைத்து குப்பையில் போட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் அவற்றை வறுத்து பொடி செய்து வைத்து ரசம் சாம்பாரில் சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஓவன் இருக்கா? அப்போ இந்த 3 ரெசிபிகளையும் மிஸ் பண்ணிடாதீங்க!
pongal recipes

வேர்க்கடலையை வறுத்துப் பொடிசெய்து வைத்து சேப்பங்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு வறுக்கும் போது எண்ணை அதிகமாக இருந்தால் இந்த பொடியைச் சேர்க்க சரியாகிவிடும்.

துவரம் பருப்பு மிளகாய் வற்றல் மற்றும் மிளகு இவற்றை வறுத்து பொடி சேர்த்து வைக்கவும். வாழைக்காய் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து வாழைக்காய் பொடி சர்க்கரை வள்ளிக் கிழங்கு பொடி தயாரிக்க சுலபமாக இருக்கும்.

பொட்டுக்கடலை, நிலக்கடலை மற்றும் மிளகாய் வற்றலை எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்து வைக்க நீங்கள் தயாரிக்கும் பொரியல்களில் இந்தப் பொடியை சேர்க்க பொரியல் சுவையாக இருக்கும்.

நீங்கள் தயாரிக்கும் சர்க்கரைப் பொங்கலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்க மிகச் சுவையாக இருக்கும்.

நீங்கள் குக்கரை இறக்கி வைத்ததும் அதன்மேல் சிறுகிண்ணங்களில் தணண்ணீரில் புளி மற்றும் இன்னொரு கிண்ணியில் அரிந்த தக்காளியை சேர்க்க குக்கர் சூட்டில் இவை நெகிழ்ந்து நீங்கள் சமயத்துக்கு பயன்படுத்த சுலபமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com