பொங்கல் குழம்பு!

ரெசிபி!
பொங்கல் குழம்பு!

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை, மொச்சைக்கொட்டை- தலா கால் கப் சக்கரை வள்ளிக் கிழங்கு - இரண்டு சேனைக்கிழங்கு -100 கிராம் முருங்கைக்காய் -ஒன்று பரங்கிக்காய்- ஒரு துண்டு 

புளிக் கரைசல்- 2 டம்ளர்,மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை வெள்ளம்- சிறிய நெல்லிக்காய் அளவு  உப்பு ,எண்ணெய்- தேவைக்கு.

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் -4 

மிளகு- இரண்டு ஸ்பூன்

 சீரகம்- ஒரு டீஸ்பூன்

 துவரம் பருப்பு ,கடலை பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்

 தனியா- மூணு டீஸ்பூன் 

தேங்காய்த் துருவல் -அரை கப்

 தாளிக்க:

கடுகு -ஒரு டீஸ்பூன், பெருங்காயம் -ஒரு சிட்டிகை நல்லெண்ணெய்- நாலு டீஸ்பூன் கறிவேப்பிலை- ஒரு கொத்து மல்லித்தழை - இரண்டு டீஸ்பூன்.

செய்முறை : மொச்சைக்கொட்டை, வேர்க்கடலை இரண்டையும் நன்கு ஊற வைத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணைய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் பொடித்து, நீர் விட்டு சற்றுக் கெட்டியாக அரைக்கவும். 

அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி  மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி போட்டு, பாதி அளவு வெந்ததும் வேக வைத்த மொச்சை, கடலை இரண்டையும் சேர்க்கவும். எல்லாம் வெந்ததும் அரைத்த கலவையையும் சேர்த்து, குழம்பு பதம் வந்ததும் வெல்லம் சேர்த்து இரண்டு கொதி வந்தவுடன் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து இறக்கவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்க வாசம் கம கமக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com