
இன்றைக்கு சுவையான கல்கண்டு பொங்கல் மற்றும் இளநீர் பொங்கல் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கல்கண்டு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.
பச்சரிசி-1/2 கப்.
கல்கண்டு-1 கப்.
பால்-1 கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
முந்திரி-10.
திராட்சை-10.
குங்குமப்பூ- சிறிதளவு.
கல்கண்டு பொங்கல் செய்முறை விளக்கம்.
முதலில் ½ கப் பச்சரிசியை தண்ணீரில் கழுவி விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். இப்போது அடுப்பில் பெரிய கடாயை வைத்து 1 கப் தண்ணீர், 1 கப் பால், ஊறவைத்த அரிசி சேர்த்து நன்றாக வேகவிடவும். அரிசி நன்றாக குழைந்து வெந்த பிறகு ஒரு ஃபேனில் கல்கண்டு 1கப் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கரைத்த கல்கண்டு பாகை சாதத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
சாதம் நன்றாக கெட்டியாக வரத்தொடங்கும் போது 2 தேக்கரண்டி நெய், ஏலக்காய் 1 தேக்கரண்டி, நெய்யில் நன்றாக பொன்னிறமாக வறுத்த முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். கடைசியாக குங்குமப்பூவை மேலே அழகுக்கு அலங்கரித்து பரிமாறவும். சுவையான கல்கண்டு பொங்கல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
இளநீர் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.
தேங்காய் தண்ணீர்-4 கப்.
அரிசி-1 கப்.
பாசிப்பருப்பு-1 கப்.
நெய்-தேவையான அளவு.
முந்திரி-10.
திராட்சை-10.
தேங்காய் துருவல்-1/2 கப்.
தேங்காய் வழுக்கை-1 கப்.
வெல்லம்-1 கப்.
ஏலக்காய் தூள்-1 கப்.
தேங்காய் பால்-1 கப்.
இளநீர் பொங்கல் செய்முறை விளக்கம்.
முதலில் 4 கப் தேங்காய் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து நெய் 2 தேக்கரண்டி ஊற்றி பாசிப்பருப்பு 1 கப், அரிசி 1 கப் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அதை இளநீருடன் சேர்த்து வேகவிடவும். இப்போது அதில் தேங்காய் பால் 1 கப், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, வெல்லம் 1 கப் சேர்த்து நன்றாக அரிசியை வேகவிடவும். அரிசி நன்றாக வெந்து குழைந்து வரும்.
இப்போது ஃபேனில் நெய் 2 தேக்கரண்டி சேர்த்து முந்திரி 10, திராட்சை 10, தேங்காய் துருவல் ½ கப், இளநீர் வழுக்கை 1 கப் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான இளநீர் பொங்கல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.