
இன்றைக்கு சுவையான நெய் பழக்கேசரி மற்றும் கம்பு சர்க்கரை பொங்கல் ரெசிபியை சுலபமாக எப்படி வீட்டிலேயே செய்யறதுன்னு பார்ப்போம்.
நெய் பழக்கேசரி செய்ய தேவையான பொருட்கள்.
நெய்-1/2 கப்.
முந்திரி-20.
அன்னாசி பழம்-1 கப்.
பச்சை திராட்சை-1கப்.
ரவை-1 கப்.
சர்க்கரை-1 கப்.
புட் கலர்-1/4 தேக்கரண்டி.
அன்னாசி எசென்ஸ் -1 தேக்கரண்டி.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1 சிட்டிகை.
நெய் பழக்கேசரி செய்முறை விளக்கம்.
முதலில் ஃபேனில் ½ கப் நெய் ஊற்றி உருகியதும் 20 முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே ஃபேனில் 1 கப் நறுக்கிய அன்னாசி பழத்தை சேர்த்து லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ரவை 1 கப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே ஃபேனில் 1 கப் ரவைக்கு 3 ½ கப் தண்ணீர் விட்டு ¼ தேக்கரண்டி புட் கலர் சேர்த்து நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கலந்து விட்டுக்கொண்டே வரவும். ரவை பாதி வெந்ததும் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 1 தேக்கரண்டி அன்னாசி எசென்ஸ் சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும்.
இப்போது 1 கப் சர்க்கரையை சேர்த்து கலந்துவிடவும். இதில் 1 சிட்டிகை உப்பு, ½ கப் நெய் சேர்த்து வதக்கி வைத்த அன்னாசி 1 கப், பச்சை திராட்சை 1 கப், வறுத்து வைத்த முந்திரி சேர்த்து கலந்துவிட்டால் சுவையான நெய் பழக்கேசரி தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கம்பு சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.
கம்பு-1கப்.
பாசிப்பயறு-1கப்.
சர்க்கரை-1கப்.
நெய்-1 தேக்கரண்டி.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.
முந்திரி-10.
கம்பு சர்க்கரை பொங்கல் செய்முறை விளக்கம்.
முதலில் கம்பு 1 கப்பை முதல்நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பாசிப்பருப்பு 1 கப்பை வறுத்துவிட்டு கம்புடன் சேர்த்து குக்கரில் தண்ணீர்விட்டு 10 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 1 கப் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் 1 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிட்டு அதில் வேகவைத்திருக்கும் கம்பு மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து கலந்துவிடவும்.
இதில் 1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துவிட்டு நெய்யில் வறுத்து வைத்திருக்கும் 10 முந்திரியை கடைசியாக சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான கம்பு சர்க்கரை பொங்கல் தயார். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.