எளிய முறையில் செய்யக்கூடிய பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்! 

ponnanganni keerai recipe.
ponnanganni keerai recipe.

நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான தேடலில் சத்தான உணவுகளின் பங்கை நாம் தவிர்க்க முடியாது. இயற்கையாகவே பொன்னாங்கண்ணியில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. பாரம்பரியமாகவே இந்திய உணவு மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் இந்தக் கீரையில் விட்டமின் ஏ,சி,கே, இரும்பு, கால்சியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.‌ 

இதன் மருத்துவ குணங்களில் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். இப்படி ஊட்டச்சத்துக்களின் மையமாகத் திகழும் பொன்னாங்கண்ணியை எப்படி எளிய முறையில் பொரியியலாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை - 2 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

எண்ணெய் - 2 ஸ்பூன் 

கடுகு - 1 ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

சிவப்பு மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பின்னர் சிவப்பு மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து, பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக் கீரையையும் சேர்த்து சில நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். 

இதையும் படியுங்கள்:
குடம்புளியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
ponnanganni keerai recipe.

பொன்னாங்கண்ணிக் கீரை வதங்கியதும் அதில் கொஞ்சம் உப்பு தூவி, கடாயை மூடி போட்டு குறைந்த வெப்பத்தில் சுமார் 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடுங்கள். கீரை நன்கு வெந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் தேங்காய் வதங்கும் வரை கூடுதலாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வேக விட்டு கிளறினால், நல்ல சுவையில் உடலுக்கு ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை பொரியல் தயார். 

பொன்னாங்கண்ணிக் கீரை நமது வீடுகளைச் சுற்றி சாதாரணமாகவே வளர்ந்திருக்கும் என்றாலும், அதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். இதில் எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. எனவே பொன்னாங்கண்ணிக் கீரை பொரியலை உங்களுடைய வழக்கமான மெனுவில் சேர்த்துக்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com