குடம்புளியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Kudampuliyin Arokkiya Nanmaigal Theriyumaa?
Kudampuliyin Arokkiya Nanmaigal Theriyumaa?

தென்னிந்திய ‌சமையல்களில் புளியின் பயன்பாடு ‌அதிகம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் புளியை விட, அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது குடம்புளி. சுவைக்கு மட்டுமன்றி, உடல் நலத்திற்கும் சிறந்ததாக குடம்புளி இருக்கிறது. மலைப் பிரதேசத்தில் வளரும் குடம்புளி கேரள சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

கோக்கம் புளி, மலபார் புளி, பானை புளி, மீன் புளி, கொடம்புளி, சீமைக் கொறுக்காய் என பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இதன் பழப் பகுதியை அப்படியே பயன்படுத்தலாம். நன்கு காய வைத்த குடம்புளியையும் சமையலுக்கு உபயோகிக்கலாம்.

குடம்புளி மிதமான புளிப்புத் தன்மை உடையது. இதில் அமிலத் தன்மை இருக்காது. இந்த குடம்புளியைக் கொண்டு சமைக்க, உணவு ருசியாக, மணமாக இருக்கும். சாதாரணமாக புளியைக் கரைத்து சமைப்பது போல் செய்ய முடியாது. உணவு கொதி நிலையில் இருக்கும்போது புளியை போட்டு பின் எடுத்து விட, புளிப்பு இறங்கி சுவை நன்றாக இருக்கும்.

புளி அசிடிட்டி உள்ளவர்களுக்கு ஆகாது. ஆனால், குடம் புளியில் அந்தப் பிரச்னை இல்லை. செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் தினமும் குடம்புளியைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வர, இரத்த சோகை, செரிமான கோளாறுகள் நீங்கும்.

அதீத பசியைக் கட்டுப்படுத்தும். குடம்புளியில் உள்ள அமிலம் மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகளை வராமல் தடுக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து மெல்லிய தோற்றத்தைத் தருகிறது. எடை குறைக்க விரும்புவோர் குடம்புளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வீக்கம் இருக்கும் இடத்தில் குடம்புளியோடு மஞ்சள் சேர்த்து பற்று போட வலி, வீக்கம் குறையும். சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். ஈரலைப் பாதுகாக்கும். குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்துகள் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். உடல் தசைகளை வலுப்படுத்தும். நீரிழிவு பிரச்னைகளை சரிசெய்யும். வாதம் உள்ளவர்களுக்கு குடம்புளியை கஷாயமாக வைத்துக் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.

குடம்புளி தோலிலிருந்து எடுக்கப்படும் சாறு வாதம் மற்றும் வயிற்று உபாதைகளைத் தீர்ப்பதோடு, மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. கால்நடைகளின் வாய் சார்ந்த பிரச்னைகளுக்கு குடம்புளி மருந்தாகப் பயன்படுகிறது. ரப்பர் மரத்திலிருந்து வடியும் பாலை கெட்டிப்படுத்த குடம்புளி உதவுகிறது. தங்கம், வெள்ளியை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

குடம்புளியைக் கொண்டு பல நன்மைகளைப் பெறலாம். சமையலில் அளவாக உபயோகிக்க ஆரோக்கியம் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com