பொட்டல்ஸ் கொழுக்கட்டையும் வரகு புதினா சாதமும்!

recipes...
recipes...

சீசனில் கிடைக்கும் பொட்டல்ஸை வைத்து கிரேவி, ப்ரை போன்றவற்றை செய்வது வழக்கம். ஆனால் அதில் கொழுக்கட்டையும் செய்யலாம். எப்படி செய்வது என்பதை இதில் காண்போம். 

பொட்டல்ஸ் கொழுக்கட்டை:

தேவையான பொருட்கள்:

பொட்டல்ஸ் - மூன்று துருவியது

பொடியாக அரிந்த பீன்ஸ் -ஒரு கப்

கேரட்- ஒன்று துருவியது

கேப்சிகம் ஒன்று- பொடியாக அரிந்தது

மிளகாய் பொடி -ஒரு டீஸ்பூன்

பாதாம் -ஐந்து 

முந்திரி- 5

பச்சரிசி மாவு -ஒரு கப்

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

தேவையான அளவு தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் உப்பு,  சிறிதளவு எண்ணெய் சேர்த்து பச்சரிசி மாவை கிளறி எடுத்து வைக்கவும். 

பாதாம், முந்திரியை பொடித்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு பீன்ஸ், பொட்டல்ஸ், கேப்சிகம், கேரட் துருவல் அனைத்தையும் போட்டு உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். முக்கால் திட்டம் வெந்ததும் பொடித்து வைத்துள்ள  பாதாம் முந்திரி பொடி சேர்த்து நன்றாக கிளறி கெட்டியாக வந்ததும் எடுத்து வைக்கவும். 

கையில் எண்ணெயை தொட்டுக்கொண்டு பச்சரிசி மாவில் சொப்பு செய்து, வெஜிடபிள் கலவையை தேவையான அளவு அதில் நிரப்பி, விருப்பப்பட்ட வடிவத்தில் கொழுக்கட்டைகளாக செய்து ஏழு நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூப்பர் ருசியில் பொட்டல்ஸ் கொழுக்கட்டை ரெடி.

வரகு புதினா ரைஸ்:

செய்யத் தேவையான பொருட்கள்:

வரகு- ஒரு கப்

புதினா -3 கைப்பிடி அளவு

இஞ்சி -சிறிய துண்டு

பச்சை மிளகாய் -இரண்டு

எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் பன்னீர் ஃப்ரைட் ரைஸ்-மாம்பழ பாயாசம் செய்யலாம் வாங்க!
recipes...

செய்முறை:

புதினா உடன் சேர்த்து இஞ்சி பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். வரகரிசியை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை வதக்கி வரகரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறி தேவையான அளவு உப்பு, மூன்று கப் தண்ணீர் விட்டு, மூன்று விசில் விட்டு எடுக்கவும். குக்கரை திறந்து சிறிதளவு லெமன் சாறு கலந்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறவும். இந்த புதினா ரைஸ் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று கழிவுகளை அகற்றி சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் தன்மை கொண்டது. இரும்பு சத்து குறைபாட்டை நீக்க கூடியது புதினா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com