
இன்றைக்கு சுவையான பாஸ்தா பால் கொழுக்கட்டை மற்றும் பனீர் இட்லி ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பாஸ்தா பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்.
பால்- 600 ml.
பாஸ்தா- 1 கப்.
துருவிய தேங்காய்- 1 கப்.
ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி.
நாட்டுச்சர்க்கரை- 100 கிராம்.
உப்பு- 1 சிட்டிகை.
பாஸ்தா பால் கொழுக்கட்டை செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 600 ml பாலை சேர்த்து நன்றாக காய்ச்சியதும் வேக வைத்த பாஸ்தா 1 கப்பை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இத்துடன் 1 கப் துருவிய தேங்காய், 100 கிராம் நாட்டுச்சக்கரை, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பாஸ்தா பால் கொழுக்கட்டை சற்று கெட்டியாக வேண்டும் என்றால், அரிசி மாவை சிறிது தண்ணீரில் கலந்து இத்துடன் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா பால் கொழுக்கட்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.
முட்டை - பனீர் இட்லி செய்ய தேவையான பொருட்கள்.
முட்டை- 3
பனீர்- 100 கிராம்.
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு.
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை.
தேங்காய் துருவல்- 1 கப்.
முந்திரி- தேவையான அளவு.
பனீர் இட்லி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 3 முட்டை, 1 கப் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, பேக்கிங் சோடா 1 சிட்டிகை, பனீர் 100 கிராம் சேர்த்து நன்றாக மசித்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.
அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு வந்ததும் இட்லி பாத்திரத்தில் முந்திரி 1 வைத்து அதன் மீது செய்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் அல்டிமேட்டான சுவையில் பனீர் இட்லி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை மறக்காமல் வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.