ஆரோக்கியமான ராகி சில்லா ரெசிபி!

Ragi Chilla Recipe.
Ragi Chilla Recipe.

நீங்கள் ஆரோக்கியமான உணவை காலையில் சாப்பிட விரும்பும் நபர் என்றால், அதற்கான சரியான தேர்வு ராகி சில்லா என்ற உணவுதான். அதுவும் சட்னியுடன் இதை தொட்டு சாப்பிட்டால், இந்த உணவுக்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். இதை செய்வது மிகவும் எளிது அதே நேரம் சுவையும் நன்றாக இருக்கும். குறுகிய நேரத்தில் ஆரோக்கியமான உணவு செய்ய வேண்டும் என நினைத்தால் இதை முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 ஸ்பூன் 

ராகி மாவு - 2 கப் 

கேரட் - ½ கப்

சோளம் - 1 வேகவைத்தது

உப்பு - தேவையான அளவு

சீரகப்பொடி - 1 ஸ்பூன் 

வெங்காயம் - 1 நறுக்கியது

தனியா பொடி - 1 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ராகி மாவு, தனியா தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். அடுத்ததாக இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். 

பின்னர் இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
சதகுப்பையின் மருத்துவப் பயன்கள் என்ன?
Ragi Chilla Recipe.

அடுத்ததாக ஒரு தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசை போல ஊற்றி வேக வைக்க வேண்டும். இருபுறமும் நன்றாக வேகும்படி திருப்பி போட்டு சமைத்தால் சுவையான ஆரோக்கியம் நிறைந்த ராகி சில்லா தயார்.  

இதை தேங்காய் சட்னி, புதினா சட்னி, கார சட்னி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். ஒருமுறை இந்த உணவை முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com