ராஜஸ்தான் மல்புவா ஸ்வீட் செய்யலாம் வாங்க! 

Rajasthan Malpua Recipe
Rajasthan Malpua Recipe
Published on

உங்களுக்கு ஸ்வீட் சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ராஜஸ்தானின் பிரபலமான இனிப்பு வகையான மல்புவாவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். இந்த ஸ்வீட் உண்மையிலேயே சாப்பிடுவதற்கு சூப்பர் சுவையில் இருக்கும். ராஜஸ்தானில் மட்டுமே கிடைக்கும் இந்த ஸ்வீட்டை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். அதன் தனித்துவமான சுவை மற்றும் அமைப்பு உங்களை சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்லும். 

தேவையான பொருட்கள்: 

  • 1 கப் மைதா 

  • ½ கப் பால்

  • ½ கப் தண்ணீர் 

  • ½ கப் சர்க்கரை 

  • ¼ கப் ரவை 

  • ¼ கப் பிசைந்த வாழைப்பழம் 

  • ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள் 

  • நெய் பொரிப்பதற்கு தேவையான அளவு. 

சர்க்கரை பாகுக்கு: 

  • 1 கப் சர்க்கரை 

  • 1 கப் தண்ணீர் 

  • ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள் 

செய்முறை: 

முதலில் சர்க்கரை பாகை தயாரித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை பாகு தயாரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, ரவை, வாழைப்பழம், பால், தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இந்த மாவு உங்களுக்கு ஏதேனும் நிறத்தில் வேண்டுமென்றால் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான நெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து வாணலியில் ஊற்றி அப்பம் போல பொரித்தெடுக்கவும். 

இதையும் படியுங்கள்:
சூரியன் திடீரென வெடித்து சிதறினால் என்ன ஆகும்? அச்சச்சோ! 
Rajasthan Malpua Recipe

இது நன்றாக வெந்ததும் கடாயில் இருந்து எடுத்து, தயாரித்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் மூழ்க வைக்கவும். சர்க்கரை பாகு நன்கு உறிஞ்சப்பட்டதும் அதை வெளியே எடுத்து, பாதாம் பிஸ்தா முந்திரி போன்ற நட்ஸ் பயன்படுத்தி அலங்கரித்தால், ராஜஸ்தானின் மல்புவா இனிப்பு தயார். 

மல்புவா ரெசிபி சூடாக இருக்கும்போது சாப்பிட சூப்பராக இருக்கும். எனவே இன்றே இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com