சூரியன் திடீரென வெடித்து சிதறினால் என்ன ஆகும்? அச்சச்சோ! 

Sun
What If the Sun Exploded Suddenly?

சூரியன் திடீரென வெடித்து சிதறினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது ஒரு Science Fiction திரைப்படத்தின் காட்சி போல தோன்றலாம். ஆனால் இந்த கற்பனையான நிகழ்வை முழுமையாக ஆராய்ந்து அதன் விளைவுகளை இந்தப் பதிவில் நாம் புரிந்துகொள்ள முற்படுவோம். 

சூரியன் நமது சோலார் சிஸ்டத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். இது பூமியில் வாழ்வதற்குத் தேவையான வெப்பத்தையும் ஒளியையும் வழங்குகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. சூரியன் வெடித்தால் அது Supernova எனப்படும் சக்தி வாய்ந்த வெடிப்பைப் போல அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த சூப்பர் நோவாவின் விளைவால் அதிகப்படியான வெளிச்சம் முதலில் வெளியேறும்.

சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதிக சக்தி மிகுந்த கதிர்வீச்சுகள் பூமியின் ஓசோன் படலத்தை முற்றிலுமாக அழித்து, விண்வெளியில் இருந்து தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை நேரடியாக நம்மீது பட வைக்கும். 

சூரிய வெடிப்பால் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி அலை நாம் நம்ப முடியாத வேகத்தில் விண்வெளியில் பயணிக்கும். வெடிக்கும் நேரத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் பொறுத்து அந்த அதிர்ச்சி அலைகளை நாம் சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் உணரலாம். இந்த அதிர்ச்சி அலையால் பூமி பேரழிவை சந்திக்கும். குறிப்பாக பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்துமே சிதைந்து போகும். 

சூரியனின் ஈர்ப்புவிசை இல்லாமல் போனால், பூமி உட்பட எல்லா கோள்களும், விண்வெளியில் தூக்கி வீசப்படும். கோள்களின் சுற்றுப்பாதைகள் சீர்குலைந்து, கோள்கள் அனைத்தும் தன் இஷ்டத்திற்கு சுழல ஆரம்பிக்கும். இதன் விளைவாக கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு, கிரகங்கள், சந்திரன்கள் மற்றும் சிறுகோள்களின் அழிவுக்கு வழிவகுக்கும். 

சூரியனின் வெப்பம் மற்றும் ஒளி இல்லாமல் பூமியின் வெப்பநிலை விரைவாகக் குறைய ஆரம்பிக்கும். மேலும் நமது கிரகம் இருளில் மூழ்கி, எல்லா உயிரினங்களும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். சூரிய ஒளி இல்லாததால் பூமியின் வானிலை முறைகளும் சீர்குலைந்து, கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
பருவமழைக் காலங்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Sun

திடீரென சூரியன் வெடிப்பதென்பது கற்பனையானது என்றாலும், இந்த நிகழ்வு நமது வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இது நமது வாழ்க்கை எந்த அளவுக்கு நிச்சயமாற்றது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பிரபஞ்சமானது எத்தகைய ஆற்றல் மிக்கது என்பதை நினைக்கச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com