ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on

இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தான் ஸ்பெஷல். லஸ்ஸியை அலங்கரித்து பரிமாறும் ஸ்டைல் தான் இதன் ஹைலைட்.

தேவையானவை :

புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கிளாஸ்

சர்க்கரை - 8 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மலாய் (பால் ஆடை) - தேவைக்கு

பால் கீரிமுடன் சேர்ந்தது (திக்கான காய்ச்சியது.) - ஒரு கப்

ஐஸ் க்யூப்ஸ்

குங்குமப்பூ - சிறிது.

ஏலக்காய் - 2

அலங்கரிக்க பால் ஆடை, க்ரீம், பாதாம், பிஸ்தா சீவல்.

செய்முறை :

கெட்டியான தயிரை சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் கடைய வேண்டும். அதை கடையும் போது நுரைத்து வரும். நடுவே கெட்டி க்ரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும். இதில் குங்குமப்பூவும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க,பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுவார்கள். இதன் ருசியும் மணமும் தனி ஸ்பெஷல்.

பன்னீர் எசன்ஸ், பழங்கள் லஸ்ஸியில் சேர்ப்பது உண்டு. பாதாம், பிஸ்தா சீவல் தூவி அதை ரிச்சாக கொடுப்பர். பானை நம் வீட்டில் இல்லையெனில் மிக்ஸியில் விப்பர் மோடில் அடித்து விட்டு விட்டு இயக்க நுரைத்து வரும்.

இந்த சம்மரில் மலாய் லஸ்ஸி அடிக்கடி செய்ய பாராட்டு நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com