ராஜஸ்தானின் கடுங்கோடைக்கு குளிர்ச்சி தரும் புளித்த மோர், கம்பு–பார்லி பானங்கள்!

காட்டு வெள்ளரி சக்ரி, புதினா, பெருஞ்சீரகம், கசகசா, பச்சை மாங்காய் போன்ற இயற்கை பொருட்களால் தயாராகும் ராஜஸ்தானி பானங்கள் கோடைக்கால வெப்பத்தையும் அஜீரணத்தையும் தணிக்கும் விதம்
rajasthan-traditional-drinks
rajasthan-traditional-drinks
Updated on

பாலைவனங்கள் நிறைந்த ராஜஸ்தானில்  கடுங்கோடையில் குளிர்ச்சியைத் தரக்கூடிய புளித்த மோர்,  கம்பு மற்றும்பார்லி மாவு போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்‌ புளிக்க வைத்து தயாரிக்கப்படுவதால் உடலின் நீரேற்றத்தை தக்க வைக்கக் கூடிய பண்பு உள்ளதாக  இருக்கிறது. அவைகள் என்னென்ன வென்று பார்ப்போம்

சாஸ் ரப்டி

இது ராஜஸ்தான் கிராமங்களின் முக்கியமான ஒன்று. இது கம்பு அல்லது பார்லி மாவை  புளித்த தயிருடன் சேர்த்து மண்பானையில் தயாரிக்கப்படுகிறது. இது குறைந்த நெருப்பில் தயாரிக்கப்பட்டு ஆறவைத்த பின் மண் பானையில் வைத்து இரவு முழுவதும் புளிக்க வைக்கப்படுகிறது. மண்பானையில் வைக்கப்படும் இதில் வறுத்து பொடி செய்த சீரகம் சேர்த்து குளிர் வைக்கப்பட்டு வெயிலில் வேலை செய்வதற்கு முன் உட்கொள்ளப் படுகிறது. இதுநாள் முழுவதும் உடலை நல்ல நீரேற்றத்துடன் வைக்கும்.

மாங்காய் பன்னா

இது கடுமையான வெயில் பாதிப்பை தன் எலக்ட்ரோ லைட் மூலம் பாதுகாக்கத் கூடிய பச்சைமாங்காய். இதற்கு மாங்காயை வேகவைத்து சதையை எடுத்து குளிர்ந்த நீரோடு சேர்த்து, அதில் புதினாவை கசக்கிச்சேர்த்து, கடல் உப்பு மற்றும் கருப்பட்டி சீரகப் பொடி சேர்த்து உட்கொள்வதால்  அதிக சத்து நிறைந்த இது கடுமையான வெயிலை எதிர்கொள்ள உதவி புரிகிறது.

ராஜஸ்தானி சார்தை

இதை தயாரிக்க பாதாம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இதில் பாதாம் பெருஞ்சீரகம், கசகசா மற்றும் ரோஜா இதழ்களை பேஸ்டாக அரைத்து  இது வடிக்கட்டப்பட்டு குளிர்ந்த பாலில் சேர்க்கப்படுகிறது. பெருஞ்சீரகமும் கசகசாவும் குளிர்ச்சியைத் தரக்கூடியவை‌. இந்த பானத்தை உட்கொள்வதன் மூலம் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைக்கமுடியும்.

இதையும் படியுங்கள்:
வயதைக் குறைக்கும் மாய பானங்கள்! விஞ்ஞானமே வியக்கும் புளித்த உணவுகளின் சக்தி!
rajasthan-traditional-drinks

தயிர் கட்டா

கோடைகாலத்தில் கிடைக்கக் கூடிய பச்சை காய்கறிகளை மற்றும் மசாலா கலந்த கடலைமாவு இதில் பயன்படுத்தப்படுகிறது. கடலை மாவில் மசாலா சேர்த்து சிறிதுநீர் சேர்த்து உருண்டைகளாக்கி குறைந்த நெருப்பில் வேகவைத்து அவற்றை தயிரில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதில் பெருங்காயம் மஞ்சள்பொடி சேர்க்கலாம். இதில் உள்ள புரதச்சத்து செரிமானத்திற்கு ஏற்றது.

கச்ரி புதினா பானம்

சக்ரி என்பது காட்டு வெள்ளரி, பாலைவனத்தில் கூட வளரக்கூடியது. குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆயுர்வேதத்தின் படி இது மூட்டு வாதம், கீல்வாதம், தோல் நோய்கள், அஜீரணம்  போன்ற பிரச்னைகளை நீக்குகிறது.  ராஜஸ்தானில் அதிகம் பயன்படுத்தும் இதை  வாசனை இஞ்சி என்றும் கூறுவதுண்டு.

அஜீரணத்தை நீக்கக் கூடியது. காயவைக்கப்பட்டு  பொடி செய்து பச்சை மிளகாய் மற்றும் மோர் சேர்க்கப்படுகிறது. இதை பிரெட்களில் தடவி உட்கொள்வது கோடைகாலத்தில் கேற்றதாக கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com