ருசியில் சிறந்த ரசகுல்லாவும், தால், கிழங்கு கச்சோரியும்!

Healthy sweet recipes
healthy snacksImage credit - youtube.com
Published on

ரம்பத்தில் ரசகுல்லா செய்யப் போகிறேன் என்றால் எல்லோரும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பார்கள். அவ்வளவு எளிதாக செய்யக்கூடிய பலகாரமா என்று. இரண்டொரு முறை செய்து பழகிவிட்டால் பிறகு எல்லாமே கைவந்த கலை ஆகிவிடும். பிறகு நாம் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம் .செய்தும் காட்டலாம் அதில் ஒரு திருப்தி கிடைக்கும். ரசகுல்லா செய்முறை விளக்கம் இதோ:

ரசகுல்லா:

செய்ய தேவையான பொருட்கள்;

பால் -ஒரு லிட்டர் 

எலுமிச்சைச் சாறு -2 டேபிள் ஸ்பூன் 

தயிர் -ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை -ஒரு கப்

ஏலப்பொடி- இரண்டு சிட்டிகை

குங்குமப்பூ -சிறிதளவு

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் நன்றாக கொதிக்கும்போதே எலுமிச்சைச் சாறு மற்றும் தயிரை சேர்த்து கலக்கவும். பால் திரிய ஆரம்பித்துவிடும். நன்றாக முழுவதும் திரிந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு மெல்லிய வெள்ளை துணியில் வடிகட்டவும். அடியில் தண்ணீரும் மேலே பன்னீரும் தங்கிவிடும். அந்தப் பன்னீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். 

அடுத்து அடிகனமான பெரிய பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையில் இரணடு கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜீனி நன்றாக கரைந்து பிசுபிசுப்பான பதம் வந்தால் போதும். இந்த நிலையில் உருட்டிய பன்னீர் உருண்டைகளை அதில் சேர்த்து சிறிது நேரம் சிறு தீயில் வேகவிடவும். உருண்டைகள் வெந்து பெரிதானதும் ஏலப்பொடி தூவி இறக்கி குங்குமம் பூவை தூவி அலங்கரிக்கவும். பின்னர் நன்றாக குளிர விட்டு அழகான கப்புகளில் பரிமாறி அசத்தவும். 

கச்சோரி:

செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு- ஒரு கப் 

கோதுமை மாவு -அரை கப்

உப்பு -சிறிதளவு

நெய்- ஒரு டீஸ்பூன்

பூரணத்திற்கு;

வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு- 2

பயத்தம் பருப்பு -ஒரு கப்

சிவப்பு மிளகாய் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடி ,ஆம்ச்சூர் பவுடர் தலா-1டீஸ்பூன்

தனியா விதை, சோம்பு தலா- ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய மல்லித்தழை- ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயப்பொடி- சிறிதளவு 

மிகவும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -ஒன்று

எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மைதா, கோதுமை மாவில் உப்பு நெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் காட்டன் துணியால் மூடி ஊறவிடவும்.  பயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். அது முக்கால் திட்டம் ஊறிய பிறகு தண்ணியை வடித்து விட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி அதை லேசாக நசுக்கி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சமையலில் ருசியை கூட்ட சில சுவையான குறிப்புகள்!
Healthy sweet recipes

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா விதை, சோம்பு இவற்றை வெடிக்க விடவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன்பின் சிவப்பு மிளகாய்பொடி, கரம் மசாலா பவுடர், பெருங்காய பொடி ஆம்ச்சூர் பவுடர்  மல்லித்தழை அனைத்தையும் சேர்த்து கிளறவும். கடைசியாக பயத்தம் பருப்பையும், வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் உப்புடன் இதோடு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி ஆற வைக்கவும். 

பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து உள்ளங்கையில் வைத்து மென்மையாக்கி, பூரணத்தில் தேவையான அளவு எடுத்து வைத்து மாவை நன்றாக இழுத்து மூடி, தேய்த்து மிதமான தீயில் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொறுமையாக பொரித்து எடுக்கவும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்திருப்பதால் சிறிதளவு இனிப்பும், காரமும் மணமும், சுவையும் நிறைந்த கச்சோரியை மல்லி, புதினா சட்னி உடன் தோய்த்து சாப்பிட்டு ருசிக்கலாம்..

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்காதவர்கள் அதை எடுத்துவிட்டும் மற்ற பொருள்களை மட்டும் வைத்தும் செய்து ருசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com