ரவா நட்ஸ் ஃப்ளேக்ஸ் கேசரியும், பன்னீர் குருமாவும்!

healthy recipes
healthy recipesImage credit - youtube
Published on

வையில் செய்யும் கேசரியை கொஞ்சம் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பர். அதன் செய்முறையைப் பற்றி இதில் காண்போம்.

ரவா நட்ஸ் ஃப்ளேக்ஸ் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவா -ஒரு கப்பு

தேங்காய்த் துருவல் பொடித்தது- அரை கப்

பாதாம், முந்திரி , வால்நட் ஃப்ளேக்ஸ்-1/2கப்

நெய் -அரை கப்

வெல்லத் துருவல் -11/2கப்

ஏலப்பொடி- கால் டீஸ்பூன்

செய்முறை:

சிரோட்டி ரவையை நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் கொதி வந்ததும் சிரோட்டி ரவையைச் சேர்த்து கிளறவும். அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும் .பிறகு வெல்லத் துருவல் ,கரகரப்பாக பொடித்த தேங்காய் துருவல், நட்ஸ் ஃப்ளேக்ஸில் பாதி, எலப்பொடி தேவையான அளவு நெய் விட்டு நன்றாக கிளறவும் .வெந்து நல்ல வாசம் வரும் பொழுது கேசரி கெட்டி ஆனவுடன் கீழே இறக்கி வைத்து பாக்கி உள்ள நட்ஸ் ஃப்ளேக்சை மேலாக தூவி நன்றாக ஆரிய உடன் அதை அப்படியே துண்டுகள் போட்டு பரிமாறவும். அசத்தல் சுவையில் அமர்க்களமாக இருக்கும் எளிய நட்ஸ் ப்ளீஸ் கேசரி இது. வெல்லம் சேர்த்து செய்திருப்பதால் அனைவரும் விரும்பி உண்பர் உடல் நலத்திற்கும் இரும்பு சத்து கிடைக்கும்.

பன்னீர் குருமா!

செய்ய தேவையான பொருட்கள்:

பந்நீர்- 200 கிராம்

பெரிய வெங்காயம்- 2 நறுக்கியது

தக்காளி -2 நறுக்கியது

ஸ்பிரிங் ஆனியன் -2 நறுக்கியது

கேப்ஸிகம் -ஒன்று நறுக்கியது

தேங்காய்த் துருவல் -2 டேபிள்ஸ்பூன்

பாதாம் ,முந்திரி தலா- 5

வறுத்த கசகசாவும் ,சோம்பும் தலா- ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 2 கீறியது

மிளகாய்த் தூள் -ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் -சிறிதளவு

தனியா தழை-அலங்கரிக்க

இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

மஞ்சள் தூள் -சிறிதளவு

தாளிக்க: சோம்பு, கிராம்பு, மராட்டி மொக்கு, பட்டை, பிரிஞ்சி இலை.

இதையும் படியுங்கள்:
வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது!
healthy recipes

செய்முறை:

தேங்காய் துருவலுடன் சோம்பு, கசகசா ,முந்திரி ,பாதம் அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பன்னீரை சதுர துண்டங்களாக்கி பொரித்து வைத்துக் கொள்ளவும்.

அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கேப்ஸிகம், ஸ்ப்ரிங் ஆனியனையும் வதக்கி விட்டு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் பொடி சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். மசாலா நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை குருமாவில் கொட்டி கிளறி பொரித்த பந்நீர் துண்டங்களை அதில் சேர்த்து ஒரு கொதிவிட்டு நன்றாக கிளறி கீழே இறக்கி வைத்து மல்லித்தழையை தூவி அலங்கரித்து சப்பாத்தி, ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் பரிமாறவும். அட்டகாசமாக இருக்கும் இந்த பந்நீர் குருமாவை அனைவரும் ரசித்து ருசித்து உண்பர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com