
இன்றைக்கு சுவையான பூசணிக்கலவைக் கூட்டு மற்றும் முள்ளங்கி சட்னி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பூசணி கலவைக்கூட்டு செய்ய தேவையான பொருட்கள்.
வெள்ளை பூசணி-1 கப்
துவரம் பருப்பு-1/2 கப்
மொச்சை-50 கிராம்
கருப்பு கொண்டைக்கடலை-50 கிராம்
மஞ்சள் தூள்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
புளி தண்ணீர்-சிறிதளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு
எழுமிச்சை பழச்சாறு-சிறிதளவு
தனியா-1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி
மிளகு-1/2 தேக்கரண்டி
தேங்காய்-1/2 கப்
காய்ந்த மிளகாய்-4
எண்ணெய்-சிறிதளவு
கடுகு-1 தேக்கரண்டி
உளுந்து-1 தேக்கரண்டி
கருவேப்பிலை- சிறிதளவு
பூசணி கலவைக்கூட்டு செய்முறை விளக்கம்.
முதலில் மொச்சை 1 கப், கருப்பு கொண்டைக்கடலை 1 கப் சேர்த்து ஊற வைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பூசணித் துண்டுகளில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
இப்போது தனியா 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, மிளகு ½ தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 4, துருவிய தேங்காய் ½ கப் ஆகியவற்றை எண்ணெய்யில் பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சிறிதளவு, புளித்தண்ணீர் சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த துவரம் பருப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய் எண்ணெய் 3 தேக்கண்டி, கடுகு1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கரு வேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து ஊற்றிக்கொள்ளவும். அவ்வளவு தான் செம சுவையில் பூசணி கலவைக்கூட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க
முள்ளங்கி சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
முள்ளங்கி-1கப்
கடலைப்பருப்பு-2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-4
பெருங்காயத்தூள்-சிறிதளவு
பூண்டு-5
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
முள்ளங்கி சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டியை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இப்போது அதில் காய்ந்த மிளகாய் 4, சின்ன வெங்காயம் 10, பூண்டு 5 ஆகியவற்றை வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
இப்போது துருவி வைத்திருக்கும் முள்ளங்கி 1 கப்பை சேர்த்து வதக்கவும். இதை மிக்ஸியில் சேர்த்ததுக் கொண்டு ஆறவைத்த பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து அத்துடன் புளி சிறிய துண்டு, உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான முள்ளங்கி சட்னி தயார். இதை சாதத்தில், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.