
இன்றைக்கு சுவையான ரவா மெதுவடை மற்றும் தேங்காய் பூ பாயாசம் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ரவா மெதுவடை செய்ய தேவையான பொருட்கள்.
ரவா-1 கப்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
கொத்தமல்லி-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
ரவா மெதுவடை செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி சிறிதளவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு அதில் 2 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் 1 கப் ரவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு நன்றாக கெட்டியானதும் மூடிப்போட்டு மூடி வைத்துவிடவும்.
இப்போது இது பத்து நிமிடம் நன்றாக ஆறியதும் எண்ணெய் கையில் தேய்த்துக் கொண்டு ரவையை நன்றாக வடைப் போல தட்டிவிட்டு எண்ணெய்யில் இருப்பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால், சுவையான ரவா வடை தயார். இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.
* தேங்காய் பூ பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.
தேங்காய் பூ-1
வெல்லம்-1 கப்
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி
தேங்கய் பால்-தேவையான அளவு
நெய்-1 தேக்கரண்டி
தேங்காய் பூ பாயாசம் செய்முறை விளக்கம்.
முதலில் தேங்காய் பூவை சிறிதாக நறுக்கிவிட்டு கடாயில் 1 தேக்கரண்டி நெய் விட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது 1 கப் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை வறுத்து வைத்திருக்கும் தேங்காய் பூவுடன் சேர்த்து நன்றாக சுண்டும்வரை வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காயில் இருந்து எடுத்த இரண்டாவது பாலை சேர்த்து விட்டு ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக பாயாசத்தை இறக்கிவிட்டு தேங்காய் பால் 1 ஆவதாக எடுத்த பாலை சேர்த்து கலந்துவிட்டு பரிமாறினால் சுவையான தேங்காய் பூ பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.